News
Loading...

பெண்கள் மீதான தாக்குதல் குறித்து டிஎஸ்பி பாண்டியராஜன் ஆடியோ விளக்கம்

பெண்கள் மீதான தாக்குதல் குறித்து டிஎஸ்பி பாண்டியராஜன் ஆடியோ விளக்கம்

திருப்பூர், சாமளாபுரத்தில் உள்ள மதுக்கடையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் அறவழிப்போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஏராளமான பெண்களும் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது டிஎஸ்பி பாண்டியராஜன் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தினார்.

தாக்குதலுக்கு உள்ளான பெண்கள் டிஎஸ்பி பாண்டியராஜன் மீது நடவடிக்கை கோரியும், காவல் துறையிலிருந்து நீக்க வேண்டும் என்றும் தற்போது உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த தாக்குதல் குறித்து டிஎஸ்பி பாண்டியராஜன் ஆடியோ விளக்கத்தை தற்போது பார்ப்போம்…



முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...