News
Loading...

தமிழகத்தில் செயற்கை முட்டை: பார்த்து சாப்பிடுங்க முட்டையை!

தமிழகத்தில் செயற்கை முட்டை: பார்த்து சாப்பிடுங்க முட்டையை!

மிழகத்தில் செயற்கை முட்டை விற்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. உணவு பாதுகாப்புத்துறை ஆணையரின் அறிவுறுத்தலின் பேரில், மாநிலம் முழுவதும் கடைகளில் சோதனை நடைபெற்று வருகிறது. உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் ஜெகநாதன் தலைமையிலான குழுவினர் அரியலூர் நகராட்சியில் செயற்கை முட்டை விற்கப்படுகிறதா என்று ஆய்வு செய்தனர். கடைகளில்  முட்டைகளை எடுத்து செயற்கை முட்டை கலந்துள்ளதா என ஆய்வு செய்தனர். 

‘முட்டையை உடைத்த பின் செயற்கை முட்டையாக இருந்தால் ஜவ்வு போன்ற பகுதியில் கடினத்தன்மை ஏற்பட்டு விடும். முட்டையை உடைத்து ஊற்றும்போது, நல்ல முட்டையாக இருந்தால் மஞ்சள் மற்றும் வெள்ளை கருவை ஊற்றினால் இரண்டும் தனித்தனியே தெளிவாக இருக்கும்’ என்றனர் அதிகாரிகள். பார்த்து சாப்பிடுங்க முட்டையை!

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...