News
Loading...

சென்னை ஆர்.கே.நகரில் நடைபெறுவதாக இருந்த இடைத்தேர்தல் ரத்து

சென்னை ஆர்.கே.நகரில் நடைபெறுவதாக இருந்த இடைத்தேர்தல் ரத்து

சென்னை ஆர்.கே.நகரில், நாளை மறுநாள் நடைபெறுவதாக இருந்த இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. பணப்பட்டுவாடா புகார்களைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. சென்னை ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, சிறப்பு தலைமைத் தேர்தல் அதிகாரி விக்ரம் பத்ரா ஆகியோரை டெல்லிக்கு அழைத்த தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி நேற்று விரிவான ஆலோசனை நடத்தினார். 

இந்நிலையில், 29 பக்க அறிக்கை ஒன்றை நேற்று இரவு தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதில், வருமானவரித்துறை அளித்த தகவலின் அடிப்படையில், அரசியல் சட்டம் 324வது பிரிவின்படி தேர்தல் ரத்து செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளதால், நியாயமாகவும்,நேர்மையாகவும் தேர்தல் நடைபெறும் சூழல் தற்போது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நியாயமாகவும், நேர்மையாகவும் தேர்தல் நடைபெறும் சூழல் வந்த பிறகு தேர்தல் நடத்தப்படும் எனவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. 

பணப்பட்டுவாடா ஆதாரங்கள் வருமான வரி ஆய்வில் தெரியவந்துள்ளதால், மக்கள் பிரதிநிதித்துவச்சட்டம் 1951 பிரிவு 21-ன்படி தேர்தலை ரத்து செய்யும் அதிகாரம் ஆணையத்துக்கு உள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. அரவக்குறிச்சி,தஞ்சை தொகுதிகளில் இதே நிலை ஏற்பட்டதாகவும், ஆர்.கே.நகரில் நூதன வழிகளில் பணப்பட்டுவாடா நடந்துள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...