News
Loading...

நீர்நிலைகளை தூர்வாரும்போது கிடைக்கும் களிமண், வண்டல்மண் இலவசமாக வழங்கப்படும்

நீர்நிலைகளை தூர்வாரும்போது கிடைக்கும் களிமண், வண்டல்மண் இலவசமாக வழங்கப்படும்

சென்னை : தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது: தமிழக அரசு நீர்நிலைகளில் படிந்துள்ள களிமண், வண்டல் மண்ணை  அப்புறப்படுத்தி அவற்றை விவசாய பணிகளுக்கு பயன்படுத்தும் நோக்கில் 1959ம் வருடத்திய தமிழ்நாடு சிறுகனிம சலுகை விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதற்கேற்ப, 800 மாட்டு வண்டி அளவிற்கான (80 கனமீட்டர் அளவு) களிமண் மற்றும் மண் எடுக்கும் உரிமைகளை தவிர, பொதுப் பணித்துறை, ஊரக வளர்ச்சி துறை மற்றும் பஞ்சாயத்துராஜ் துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள் மற்றும் இதர நீர்நிலைகளில் இருந்தும் சீனியரேஜ் தொகை செலுத்தாமல் 60 கன மீட்டருக்கு மிகாமல் எடுத்துச்செல்ல மண்பாண்ட தொழிலாளர்களுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

விவசாயிகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நஞ்சை நிலங்களுக்கு ஒரு ஏக்கருக்கு 75 கன மீட்டருக்கு (25 டிராக்டர் லோடுகள்) மிகாமலும், புஞ்சை நிலங்களுக்கு ஒரு ஏக்கருக்கு 90 கன மீட்டர் (30 டிராக்டர் லோடுகள்) மிகாமலும், நீர்நிலைகளில் இருந்து  வண்டல்மண் எடுத்துச்செல்ல விதிகளில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

யாருக்கு கிடையாது

அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, ‘சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள் தவிர்த்து அனைத்து மாவட்டங்களுக்கும் பொருந்தும் என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...