News
Loading...

சீனாவுக்கு இந்திய அரசு கண்டனம்

சீனாவுக்கு இந்திய அரசு கண்டனம்

பெயர்களை மாற்றி அறிவித்துவிட்டதால் ஆக்ரமிப்பு செய்துள்ள இந்தியாவின் நிலங்களுக்கு சீனா உரிமை கோர முடியாது என்று மத்திய அரசு திட்டவிட்டமாக தெரிவித்துள்ளது. அருணாச்சலப்பிரதேசத்தில் 6 ஊர்களுக்கு சீனா புதிய பெயர்களை சூட்டி தங்களுக்கு சொந்தமான பகுதியாக அறிவித்துள்ளது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மத்திய வெளியுறவு அமைச்சகம், அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கு திபெத்திய ஆன்மீகத்தலைவர் தலாய் லாமா வருகை தந்து அருணாச்சலப் பிரதேசத்தில் சுற்றுப்பயணம் செய்ய இந்திய அரசு அனுமதியளித்தற்கு சீனா கடும் ஆட்சேபம் எழுப்பி வருகிறது. இதையடுத்து அருணாச்சலப் பிரதேசத்தில் தனது உரிமையை நிலை நாட்ட சீனா அதிரடியாக 6 ஊர்களுக்கு புதிய பெயரிட்டு அறிவிப்பு வெளியிட்டிருப்பதாக சீனாவின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...