News
Loading...

வீட்டில் தனியாக இருந்த பெண்களை மனோவசியம் செய்து நகைகளை பறித்த இஸ்லாமியர்கள்

வீட்டில் தனியாக இருந்த பெண்களை மனோவசியம் செய்து நகைகளை பறித்த இஸ்லாமியர்கள்

சென்னை யானைக்கவுனி பகுதிகளில் வீட்டில் தனியாக இருக்கும் குடும்ப பெண்களிடம் பேச்சுகொடுக்கும் 4 பேர், அவர்கள் பிரச்சனை பற்றி பேசி தாங்கள் மாந்தரீகம் செய்பவர்கள் என்று கூறியுள்ளனர். ஹிப்னடிசம் மூலம் அவர்களை மயக்கி பின்னர் வீட்டிலுள்ள நகைகளை பறித்து செல்வதை அந்த 4 பேரும் வாடிக்கையாக வைத்துள்ளனர்.

இவர்களிடம் நகைகளை பறிகொடுத்தவர்கள் தொடர்ந்து போலீசில் புகார் அளித்ததை அடுத்து, அவர்களிடம் போலீசார் போலீசார் விசாரணை நடத்தினர்.

மனோவசியம் செய்து நகைகளை பறித்த பின்னர் விஷயத்தை வெளியே சொன்னால் பில்லி சூன்யம் வைத்து கொன்று விடுவோம் என்றும், மீண்டும் திரும்ப வரும் போது வேறு நகை , பணம் இருந்தால் எடுத்து வைக்க வேண்டும் என்று மிரட்டியதாக விசாரணையின் போது சில பெண்கள் கூறியது போலீசாரை திடுக்கிட வைத்தது.

இதையடுத்து இந்த நூதன கொள்ளை கும்பலை பிடிக்க வலை விரித்த போலீசார், பாதிக்கப்பட்ட பெண்களிடம் அந்த கும்பல் மீண்டும் பேசினால் வீட்டுக்கு வரச்சொல்லிவிட்டு தங்களுக்கு தகவல் கூற அறிவுறுத்தியிருந்தனர்.

அதன் படி ஏற்கனவே நகையை பறிகொடுத்த பெண் ஒருவர் வீட்டுக்கு, நான்கு பேரில் ஒருவன் பேசி தாங்கள் மீண்டும் வருவதாக கூறியுள்ளான். இதையறிந்த போலீசார் அந்த வீட்டுக்குள் மறைந்திருந்து கண்காணித்தனர்.

சொன்னபடி நான்கு நபர்களும் வீட்டுக்குள் வர மறைந்திருந்த போலீசார் அவர்களை மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் நால்வரும் நாக்பூரை சேர்ந்த ஹைதர் அலி , சஜ்ஜார் , அன்வர் ஜாஃபர் , யாசீன் அலி என தெரிய வந்தது.

அவர்களை கைது செய்த போலீசார், யார் யாரை எல்லாம் ஏமாற்றி நகைத்திருட்டில் ஈடுபட்டனர் என்று விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் நூற்றுக்கணக்கான சவரன் தங்க நகைகளை அவர்கள் இவ்வாறு திருடியது தெரிய வந்துள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...