News
Loading...

ஸ்காட்லாந்து யார்டு போலீசாரால் கைது செய்யப்பட்டு 3 மணி நேரத்தில் விஜய்மல்லையாக்கு ஜாமீன்

ஸ்காட்லாந்து யார்டு போலீசாரால் கைது செய்யப்பட்டு 3 மணி நேரத்தில் விஜய்மல்லையாக்கு ஜாமீன்

விஜய் மல்லையா ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட 17 வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் லண்டன் தப்பிச் சென்றார். அவர் மீது இந்திய நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகள் நடைபெற்று வருகின்றன. லண்டனில் தஞ்சம் புகுந்த விஜய் மல்லையா வழக்குகள் எதிலும் ஆஜராக மறுத்து வந்ததை அடுத்து அவரை கைது செய்து ஒப்படைக்குமாறு சர்வதேச போலீசாருக்கு இந்திய அரசு கோரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் லண்டனில் விஜய் மல்லையாவை கைது செய்த ஸ்காட்லாந்து யார்டு போலீசார், அவரை லண்டனில் உள்ள வெஸ்ட் மின்ஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். விஜய்மல்லையாவுக்கு நீதிபதி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். கைது செய்யப்பட்ட 3 மணி நேரத்தில் விஜய்மல்லையா ஜாமீன் பெற்றுத் திரும்பினார்

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...