News
Loading...

கோடநாடு எஸ்டேட் பங்களா காவலாளி கொலை! முக்கிய ஆவணங்கள் திருடப்பட்டதா?

கோடநாடு எஸ்டேட் பங்களா காவலாளி கொலை! முக்கிய ஆவணங்கள் திருடப்பட்டதா?

கோடநாடு எஸ்டேட் பங்களாவில் கொள்ளையடிக்க வந்த மர்ம நபர்கள் காவலாளி ஒருவரை அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, தாம் வாழ்ந்த காலத்தில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு எஸ்டேட் பங்களாவிற்கு சென்று ஓய்வெடுப்பது வழக்கம். 

நேற்று நள்ளிரவு பங்களாவின் 10ஆவது நுழைவாயிலில் ஓம் பகதூர், கிஷன் பகதூர் ஆகியோர் காவல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு கார்களில் வந்த 10க்கும் மேற்பட்டோர் பங்களா உள்ளே நுழைய முயற்சித்துள்ளனர். அவர்களை பார்த்து, காவலாளிகள் இருவரும் கூச்சலிடவே, ஆயுதங்களால் தாக்கியதில் காவலாளி ஓம் பகதூர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தாக்குதலில் படுகாயமடைந்த மற்றொரு காவலாளி கிஷன் பகதூரை அங்கேயே கட்டிப்போட்டுவிட்டு, மர்ம நபர்கள் தப்பிச் சென்றனர். 

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் கண்காணிப்பாளர் முரளி தலைமையிலான போலீசார், மோப்ப நாயை வரவழைத்து சோதனை நடத்தினர். மோப்ப நாய் சிறிதுதூரம் ஓடியபிறகு, யாரையும் பிடிக்காமல் நின்றுவிட்டது. இதையடுத்து, தடயங்களை சேகரித்து வரும் போலீசார், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், காவலாளி கிஷன் பகதூரிடம் விசாரணை நடத்த முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

இதனிடையே, செய்தியாளர்களைச் சந்தித்த கோடநாடு முன்னாள் ஊராட்சித் தலைவர் பந்தோஷ், முக்கிய ஆவணங்களை திருடவே மர்ம நபர்கள் வந்திருப்பார்கள் என்று சந்தேகம் தெரிவித்தார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...