News
Loading...

சர்வதேச புத்த மத மாநாட்டில் பங்கேற்க இலங்கை செல்கிறார் பிரதமர் மோடி

சர்வதேச புத்த மத மாநாட்டில் பங்கேற்க இலங்கை செல்கிறார் பிரதமர் மோடி

ர்வதேச புத்தமத மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி வரும் மே மாதம் இலங்கை செல்ல உள்ளார்.

வரும் மே மாதம் 12-ம் தேதியில் இருந்து 14-ம் தேதிவரை புத்தமதம் தொடர்பான சர்வதேச மாநாடு ஒன்றை புத்த மதத்தினர் அதிகமாக வாழும் இலங்கையில் நடத்த ஐக்கிய நாடுகள் சபை தீர்மானித்தது.

சுமார் 400 முக்கிய விருந்தினர்கள் பங்கேற்கும் இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்வார் என இலங்கை நாட்டின் நீதித்துறை அமைச்சர் விஜேயதாஸ ராஜபக்சே தெரிவித்துள்ளார். மூன்று நாட்கள் பயணமாக அவர் இலங்கைக்கு வர உள்ளதாகவும், அப்போது இரு நாட்டு உறவை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் அவர் கூறினார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...