News
Loading...

மணல் கொள்ளையர்களின் சொர்க்க பூமி நாமக்கல் மாவட்டம்

மணல் கொள்ளையர்களின் சொர்க்க பூமி நாமக்கல் மாவட்டம்

நாமக்கல் மாவட்டம் இடையாறு உள்ளிட்ட சில பகுதிகளில் மணல் கொள்ளை கும்பல் தலைக்கு ரூ.1000 கொடுத்து மணல் கொள்ளையை கண்டு கொள்ளாதீர்கள் என்று கூறியது. பிறந்த குழந்தைக்கும் கூட ரூ.1000 கொடுத்தது. 

இன்றும், டைலர் சங்கம் போன்று ஏதாவது சங்கம் சுற்றுலா சென்றால், இந்த மணல் கொள்ளை கும்பல் ரூ. 10,000 தரும்.

மக்கள் இப்படி பணத்திற்கு விலைப்போன காரணத்தால் தான், இன்று காவிரி வற்றி கிடைக்கிறது. 

படத்தில் உள்ள மோகனூர் காவிரி ஆறு, இக்கரையில் இருந்து அக்கரைக்கு ஏறக்குறைய 1 கி.மீ. இருக்கும். சில வருடங்களுக்கு முன்பு வரை படகு முலம் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டது. கடல் போல் காட்சியளிக்கும் ஆறு, மணல் கொள்ளையால், இன்று வறண்டு கிடக்கிறது.

நிலத்தடி நீர்மட்டமும் குறைந்துக் கொண்டே வருகிறது. 10 வருடங்களுக்கு முன் 15 அடியில் போர் போட்டு கிடைத்த தண்ணீர் இன்று 50 அடியில் தான் கிடைக்கிறது. எதிர்காலத்தில் நிலத்தடி நீரும் இல்லாமல் போய்விடும்.

மணலை கொள்ளையடிக்க அனுமதித்துவிட்டு, வறட்சியாகி விட்டது, விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வேணும், கடன் தள்ளுபடி வேணும்னு முதலை கண்ணீர் விட வேண்டியது.

மணல் கொள்ளையர்களிடம் இனியும் பணம் வாங்கிக் கொண்டு கண்டுக்கொள்ளாமல் இருந்தால், நாமக்கல் மாவட்ட மக்கள் சூடு, சொரனை அற்றவர்கள் என்றே சொல்ல வேண்டும்.

#ADMK #DMK #Namakkal #Mohanur

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...