News
Loading...

முத்தலாக் விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

முத்தலாக் விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

முத்தலாக் முறைக்கு எதிராக கடும் கண்டனத்தை முன்வைத்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி முஸ்லீம் சகோதரிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்குமாறு இஸ்லாமிய சமூகத்தினரைக் கேட்டுக் கொண்டார்.

ஒடிசா மாநிலம் புவனேசுவரில் நடைபெற்ற பாஜக தேசிய செயற்குழுக்கூட்டத்தின் நிறைவு நாள் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய பிரதமர் மோடி முஸ்லீம் பெண்களுக்கு ஆதரவாக தமது வலுவான கருத்துகளை பதிவு செய்தார்.மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து கூறும் முஸ்லீம் நடைமுறைகளுக்கு எதிராக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் வாதம் செய்துவரும் நிலையில் அந்த வழக்குக்கு ஆதரவு அளிக்கும்படி அவர் இஸ்லாமியர்களைக் கேட்டுக் கொண்டார். 

முஸ்லீம் மக்களில் பின்தங்கிய சமூகத்தினரை அரசின் நலத்திட்டங்கள் மூலம் சென்றடைய வேண்டும் என்று வலியுறுத்திய மோடி, முஸ்லீம் சகோதரிகளுக்கு ஏற்படும் அநீதியில் இருந்து அவர்களை பாதுகாக்க வேண்டும் என்றும் கோரினார். தேர்தல் தோல்விகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை குறைகூறுவதாக எதிர்கட்சிகளை பிரதமர் குற்றம்சாட்டினார். வெற்றிகளில் ஓய்வு எடுக்காமல் கடுமையாக உழைக்குமாறு பாஜகவினரை அறிவுறுத்திய அவர், சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசாமல் அமைதியாக இருக்கும் கலையையும் பாஜக தலைவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...