News
Loading...

ஜலகண்டாபுரத்தில் நீரின்றி வறண்ட பெரிய கிணறு

ஜலகண்டாபுரத்தில் நீரின்றி வறண்ட பெரிய கிணறு

லகண்டாபுரத்தில் வறட்சியால், நீரின்றி பெரிய கிணறு வறண்டு கற்களாக காட்சி அளிக்கிறது. ஜலகண்டாபுரம் பேரூராட்சியில், அரசமரம் பஸ் ஸ்டாப் அருகே பெரிய கிணறு உள்ளது. எப்போதும் நீர் நிரம்பிய நிலையில், அப்பகுதியில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் நீரை பயன்படுத்தி வந்தனர். வெயில் காலங்களில், அப்பகுதி இளைஞர்கள், மாணவர்கள் பலர் நீச்சலடித்து மகிழ்ந்தனர். கடந்த 2015ம் ஆண்டில் இதே நாளில், கிணறு முழுவதும் தண்ணீர் நிரம்பி இளைஞர்கள் நீச்சலடித்து மகிழ்ந்தனர். 

ஆனால், இந்த ஆண்டு வறட்சியால், இந்த கிணறு நீரின்றி வறண்டு வெறும் கற்களாக காணப்படுகிறது.  கொளுத்தும் வெயிலுக்கு இதமாக குளியல் போட முடியாமல், இப்பகுதி இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் பெரிதும் ஏமாற்றமடைந்துள்ளனர். மழை பெய்தால் மட்டுமே, வறண்ட நீர் நிலைகள் வளம் பெறும் என்பதால், மழையை எதிர்நோக்கி பொதுமக்கள் காத்திருக்கின்றனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...