News
Loading...

பெட்ரோல், டீசல் விலை உயர்வு.. இன்று நள்ளிரவு முதல் அமல்!

பெட்ரோல், டீசல் விலை உயர்வு.. இன்று நள்ளிரவு முதல் அமல்!

பெட்ரோல், டீசல் விலை சிறிய அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு ஒரு பைசா உயர்த்தப்பட்டது. டீசல் லிட்டருக்கு 44 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்திற்கு தகுந்தவாறு இந்தியா முழுவதும் எண்ணெய் நிறுவனங்கள் விலையை மாற்றி அமைத்து வருகின்றன. 15 நாட்களுக்கு ஒரு முறை என்ற கால இடைவெளியில் இந்த விலை மாற்றத்தை எண்ணெய் நிறுவனங்கள் அறிவிக்கின்றன. அதன்படி, பைசா அளவில் இன்றைய மாற்றம் நிகழ்ந்துள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு ஒரு பைசா மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. 

அன்றாடம் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது குறித்து சில நாட்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், சோதனையின் அடிப்படையில் புதுச்சேரியில் மே 1-ம் தேதி முதல் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை அன்றாடம் மாற்றப்படும் என்று மத்திய பெட்ரோலியத் துறை தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...