News
Loading...

அக்ஷ்ராஹாசன் படத்துக்கு எதிராக போராட்டம்

அக்ஷ்ராஹாசன் படத்துக்கு எதிராக போராட்டம்

மிதாப் படத்திற்கு பிறகு அக்ஷ்ராஹாசன் நடித்து வரும் இந்திப் படம் லாலி கி சாதி மெயின் லாட்டு தீவானா. மனிஷ் ஹரிசங்கர் இயக்கி உள்ளார். அக்ஷ்ராவுடன் விவன் ஷா, குர்மித் சவுத்ரி, கவிதா வர்மா நடித்துள்ளனர். விபின் பத்ரா சித்தார்த், இசை அமைத்துள்ளனர். ரவி யாதவ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

திருமணத்துக்கு முன்பே கர்ப்பமாகும் ஒரு பெண் சந்திக்கும் பிரச்சினைகள்தான் படத்தின் கதை. இறுதியில் திருமணத்துக்கு முன்பு கர்ப்பமாவது ஒன்றும் தவறல்ல என்கிறதாம் படம். இதில் அக்ஷ்ராஹாசன் திருமணத்துக்கு முன்பு கர்ப்பமாகும் பெண்ணின் கேரக்டரில் நடித்துள்ளார். அவர் திருமண மேடையில் கர்ப்பவதி தோற்றத்துடன் அமர்ந்திருக்கும் படங்கள் வெளிவந்தது.

தற்போது இந்தப் படத்திற்கு விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்திய கலாச்சாரத்தை சீரழிக்கும் விதமாகவும், இந்திய பெண்களை அவமானப்படுத்தும் விதமாகவும் படத்தின் கதை இருப்பதாக கூறி போராட்டம் நடத்தி வருகிறார்கள். மும்பை அந்தேரி பகுதியில் உள்ள படத்தின் தயாரிப்பாளர் அலுவலகம் முன் போராட்டம் நடத்தினார்கள். படத்தின் காட்சிகளை நீக்க கோரியும் கதையை மாற்றக் கோரியும் தொடர்ந்து போராட்டம் நடத்த போவதாக விஷ்வ இந்து பரிஷத் அறிவித்துள்ளது.

"படத்திற்கு தணிக்கை குழு யூ/ஏ சான்றிதழ் கொடுத்துள்ளது. யாரையும் புண்படுத்தும் காட்சிகள் எதுவும் படத்தில் இல்லை. அதனால் ஒரு காட்சியைகூட நீக்க மாட்டோம்" என்று படத்தின் தயாரிப்பாளர் டி.பி.அகர்வால் தெரிவித்துள்ளார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...