News
Loading...

சாமளாபுரம் மதுக்கடை விவகாரம்: போலீஸ் அதிகாரியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன்

ஏடிஎஸ்பி அடித்ததில் காயமடைந்த பெண் ஈஸ்வரிக்கு ஆறுதல் தெரிவித்த தமிழிசை சவுந்தரராஜன்.
ஏடிஎஸ்பி அடித்ததில் காயமடைந்த பெண் ஈஸ்வரிக்கு ஆறுதல் தெரிவித்த தமிழிசை சவுந்தரராஜன்.

திருப்பூர் மாவட்டம் சாமளாபுரத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் பொதுமக்களைத் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

அனைவரும் நன்றாக வாழ வேண்டும் என்பதற்காக, தங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை வேண்டாம் என போராட்டம் நடத்திய பெண்கள் மீது போலீஸார் தடியடி நடத்தி வன்முறையை கட்டவிழ்த்துள்ளனர். ஆண்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர். ஒரு பெண்ணை ஏடிஎஸ்பி பாண்டியராஜன் கன்னத்தில் அடித்ததில், அவருக்கு காது கேட்கவில்லை. அவர் அடித்த அடியில், மூளையில் ரத்தக் கசிவு ஏற்படக்கூட வாய்ப்பு உள்ளது.

டாஸ்மாக் கடை வேண்டாம் என்று போராடியவர்கள் மீது காவல் துறை தடியடி நடத்தியது எந்த விதத்தில் நியாயம்? காவல்துறை வாகனத்தை போலீஸாரே அடித்து சேதப்படுத்திவிட்டு, போராட்டத்தில் ஈடுபட்ட சகோதரர்கள் மீது பிணை யில் வெளிவராதபடி பொய் வழக்குப் போட்டுள்ளது எந்த வகையில் தர்மம்?

சட்டப்பேரவை உறுப்பினர் சென்றதும், போலீஸார் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். பெண்களைத் தாக்கிய காவல்துறை அதிகாரி பாண்டியராஜனை உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும். அத்துடன் தடியடியால் பாதிக்கப்பட்ட தாய் மார்களிடம் அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். பாதிக் கப்பட்டவர்களுக்கு அரசு செலவில் சிகிச்சை அளிக்க வேண்டும். பெண் களை அடிக்க அவருக்கு உரிமை யில்லை. தமிழ்நாட்டில் பெண்கள் கிள்ளுக்கீரைகளாக போய்விட்டார் களா? இந்த பெண்களோடு கடைசி வரை பாஜக போராடும்.

இனி, தமிழகத்தில் புதிதாக ஒரு டாஸ்மாக் கடையை திறக்க அனுமதிக்க மாட்டோம். வெகுவிரைவில், கட்சி சார்பற்று அனைத்து பெண்களையும் திரட்டி மதுக்கடைக்கு எதிராக மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம்.

அதிமுக, திமுகவினர் மது தயாரிக்கும் ஆலைகளை வைத்துள்ளனர். அது தொடர்பான பட்டியலை எங்களால் வெளியிட முடியும். அவர்கள் முதலில் மது ஆலைகளை மூடட்டும். அதன்பிறகு மதுவிலக்கு பற்றி பேசட்டும் என்றார்.

தாக்கப்பட்ட ஈஸ்வரி

ஏடிஎஸ்பியால் தாக்குதலுக்கு ஆளான ஈஸ்வரி, கூறியதாவது:

நாங்கள் போராட்டத்தில் ஈடுபட் டிருந்தோம். எங்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். அப்போது வலி தாங்காமல் அவர்களை தடுத்தோம். இதையடுத்து கையால் தடுத்ததை பொறுத்துக்கொள்ளாத ஏடிஎஸ்பி என்னை தாக்கினார். எனது இடது காதில் பலமாக தாக்கினார். தற் போது தீவிர சிகிச்சை எடுத்துள் ளேன். தொடர்ந்து சிகிச்சை எடுக்க வேண்டிய நிலைமை ஏற் பட்டுள்ளது. காதில் அடி பலமாக விழுந்ததால், அதன் கேட்கும் திறன் குறைந்துள்ளது. அதை தற்போது உணர்கிறேன். ஊருக்குள் மதுக் கடைகள் வரக்கூடாது என்பதில் நாங்கள் தீவிர முனைப்புடன் உள்ளோம் என்றார்.

நடிகர் ரஞ்சித் ஆறுதல்

பாதிக்கப்பட்டவர்களைச் சந் தித்து திரைப்பட நடிகர் ரஞ்சித் ஆறுதல் தெரிவித்தார். சம்பந்தப் பட்ட காவல் அதிகாரி மற்றும் போலீஸாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...