News
Loading...

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடை திறக்க கடும் எதிர்ப்பு

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடை திறக்க கடும் எதிர்ப்பு

சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட, குரும்பப்பட்டி வனஉயிரியல் பூங்கா செல்லும் வழியில் ஜீவா நகர் பகுதியில் புதியதாக டாஸ்மாக் கடை திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை அறிந்த அப்பகுதி பெண்கள் மற்றும் ஆண்கள் 100க்கும் மேற்பட்டோர் அங்கு சென்று சாலையில் அமர்ந்து சமையல் செய்து போராட்டம் நடத்தினர். பேச்சுவார்த்தைக்கு வந்த கன்னங்குறிச்சி காவல் ஆய்வாளர் கருணாகரனையும் அவர்கள் திருப்பியனுப்பினர். தொடர்ந்து, அப்பகுதியில் குழந்தைகளுடன் அவர்கள் இரவு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அங்கு டாஸ்மாக் கடை அமைப்பதால் மாணவிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் கடை அமைக்கும் முயற்சியை கைவிடவேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே மதுபான கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் கடை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அழகர்கோவில் அருகே கிடாரிப்பட்டியில் மூடப்பட்ட மதுபான கடையினை, அய்யம்பட்டி பகுதியில் திறப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதையறிந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமின்றி கடையை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த மேலவளவு காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும், அவர்கள் கலைந்து செல்ல மறுத்தனர். இந்நிலையில், அங்கு வந்த மேலூர் வட்டாட்சியர், கடை அப்புறப்படுத்தப்படும் என உறுதியளித்தார். அதன்படி சரக்கு வாகனம் மூலம் மதுபாட்டில்கள் அங்கிருந்து அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...