News
Loading...

டாஸ்மாக் கடைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் தீவிரம்

டாஸ்மாக் கடைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் தீவிரம்

குடியிருப்பு பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை அமைக்கக் கூடாது என வலியுறுத்தி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் நடத்தி வரும் போராட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தெற்கு வெங்காநல்லுர் பகுதிக்கு உட்பட்ட ஆசிரியர் குடியிருப்பு பகுதிக்குள் புதிதாக டாஸ்மாக் கடை வருவதற்கான ஏற்பாட்டில் அரசு அதிகாரிகள் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த அப்பகுதி பொதுமக்கள், குடியிருப்பு நல சங்கத்தினர், மாணவ,மாணவிகள் மற்றும் பெண்கள் ஆகியோர் ஆலங்குளம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் டாஸ்மாக்கிற்கு எதிராக முழக்கங்களை எழுப்பியபடி போராட்டத்தில் ஈடுபட்டபோது அங்கு வந்த காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
சம்பவ இடத்திற்கு வட்டாட்சியர் வந்து டாஸ்மாக் கடை வராது என்று உறுதி அளித்த பின்னர், பொதுமக்கள் சாலை மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

சேலத்தில் புதியதாக டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணின் அவரது கணவர் கட்டையால் அடித்து தாக்கினார். செட்டிச்சாவடி பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட புனிதா என்ற பெண்ணை, போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என அவர கணவர் கூறியுள்ளார். ஆனால், புனிதா அதை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால், ஆத்திரமடைந்த கணவர், அருகில் கிடந்த கட்டையை எடுத்து அவரது தலையில் தாக்கினார். இதையடுத்து மருத்துவமனைக்கு சிகிச்சை எடுத்துக்கொண்ட புனிதா, மீண்டும் போராட்டத்தில் கலந்துகொண்டார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...