News
Loading...

திருப்பூரில் டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கிய பொதுமக்கள்..!

திருப்பூரில் டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கிய பொதுமக்கள்..!

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபானக்கடைகளை அகற்ற வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட்டது.

திருப்பூரில் டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கிய பொதுமக்கள்..!

இந்த கடைகள் வேறு இடத்திற்கு மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் சில டாஸ்மாக் கடைகள் குடியிருப்பு பகுதிக்குள் வர உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பூர் மாவட்டம் சாமளாபுரத்தில் டாஸ்மாக் கடையை எதிர்த்து பெண்கள் போராட்டம் நடத்தினர். போராட்டக்காரர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியது பெரும் விவாதத்தை ஏற்பத்தியது.

திருப்பூரில் டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கிய பொதுமக்கள்..!

இந்த நிலையில், திருப்பூர் அருகே உள்ள முதலிபாளையத்தில் புதிய டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள இந்த டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர்.

திருப்பூரில் டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கிய பொதுமக்கள்..!

பொதுமக்கள் கோரிக்கையை மீறி டாஸ்மாக் கடை அப்பகுதியில் திறக்கப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், இளைஞர்கள் டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கினர். அதுபோல டாஸ்மாக் பாரையம் அடித்து நொறுக்கினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...