News
Loading...

குடியிருப்புப் பகுதியில் மதுக்கடைகள் அமைக்க வலுக்கிறது எதிர்ப்பு

குடியிருப்புப் பகுதியில் மதுக்கடைகள் அமைக்க வலுக்கிறது எதிர்ப்பு

நெடுஞ்சாலைகளில் அகற்றப்படும் டாஸ்மாக் கடைகளை ஊருக்குள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு இடங்களில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் டாஸ்மாக் மதுக்கடையை கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தீப்பந்தம் ஏந்தியவாறு சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். மதுவுக்கு எதிராக பதாகைகளை ஏந்தியபடி, பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட ஏராளமானோர் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர். 

திருச்சியில் பொன்மலை முன்னாள் ராணுவத்தினர் குடியிருப்புப் பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுக்கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வேங்கைகுறிச்சி கிராமத்தில் டாஸ்மாக் மதுக்கடை கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி -திண்டுக்கல் நெடுஞ்சாலையில் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்புறப்படுத்த முயன்ற காவல்துறையினருடன் அவர்கள், வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

திருவண்ணாமலை மாவட்டம் மோரனம் யுகாலனியில் நெடுஞ்சாலை டாஸ்மாக் மதுக்கடையை அகற்றி கிராமத்துக்குள் அமைக்க வந்த அதிகாரிகளை கிராம மகக்ள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கிராமக்களின் எதிர்ப்பை தொடர்ந்து, அங்கு வந்த வருவாய்த்துறை அதிகாரிகள் திரும்பி சென்றனர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதி ஆலங்காட்டுவலசு, பூலக்காடு, கே.கே.நகர் உள்ளிட்ட கிராமங்களில் டாஸ்மாக் மதுக்கடைகளை கொண்டு வரக்கூடாது என கிராம மக்கள், தாசில்தார் ரகுநாதனிடம் மனு கொடுத்தனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...