News
Loading...

கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றிய தெலுங்கானா மாநில அமைச்சர்கள்

கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றிய தெலுங்கானா மாநில அமைச்சர்கள்

தெலுங்கானா மாநில முதலமைச்சர் கே.சந்திரசேகரராவின் மகளும், எம்.பி.யுமான கவிதா, ஜவுளிக்கடை விற்பனையாளராக வேலை செய்து கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றினார். 

தெலங்கானா ராஷ்ட்ரிய சமீதி கட்சிக்கு, தங்களின் கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றி தருவதற்காக, அமைச்சர்கள் உள்ளிட்டோர் ஒரு நாள் கூலி வேலை செய்வார்கள் என சந்திரசேகரராவ் அறிவித்தார். அதன்படி, அவரது மகள் கவிதா, நிஜாமுதீன் நகரில் ஜவுளிக்கடை ஒன்றில் விற்பனையாராக வேலை செய்தார். 

இதையறிந்த கட்சியினர் ஆர்வத்துடன் திரண்டதோடு, பேரம் பேசாமல் புடவைகள் வாங்குவதுப் போல் நடித்தனர். இதனால் சுமார் 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புடவைகள் விற்பனையாகின. அந்தத் தொகை கவிதாவுக்கே வழங்கப்பட்டது. 

45 நிமிடத்தில் 6 லட்சம் ரூபாய் கருப்புப் பணத்தை, வெள்ளையாக்கியவர், அந்தத் தொகையை கட்சி நிதிக்கு அளித்தார், மேலும் ஒரு நாள் கூலி வேலை செய்யப் போவதாக அறிவித்தார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...