News
Loading...

உத்தரப்பிரதேசத்தில் ஏழுநாட்களும் 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரம் – யோகி ஆதித்யநாத்

உத்தரப்பிரதேசத்தில் ஏழுநாட்களும் 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரம் – யோகி ஆதித்யநாத்

விவசாயக் கடன்கள் தள்ளுபடியை தொடர்ந்து மிகப்பெரிய அதிரடி அறிவிப்பு ஒன்றை உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வெளியிட்டுள்ளார். அனைவருக்கும் வாரத்தின் ஏழு நாட்களுக்கும் 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரம் விநியோகிக்கப்படும் என்று உத்தரப்பிரதேச அரசு அறிவித்துள்ளது. இதற்காக மத்திய அரசுடன் உத்தரப்பிரதேச அரசு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய மின்துறை அமைச்சர் பியூஷ் கோயல் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அனைத்துப் பள்ளிகளிலும் தலைவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு விடுமுறை அளிப்பதை ரத்து செய்த யோகி அரசு அந்த நாட்களில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகளை நடத்த இருப்பதாக அறிவித்துள்ளது. அனைத்து அரசு ஒப்பந்ததாரர்களும் இனி ஊழலைத் தடுக்க மின்னணு பரிமாற்றம் மூலமே பணம் செலுத்த வேண்டும் என்றும் உத்தரப்பிரதேச அரசு அறிவித்துள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...