News
Loading...

அவைக்கே வராமல் 60 லட்சம் சம்பளம் வாங்கிய சச்சின், ரேகா..!

அவைக்கே வராமல் 60 லட்சம் சம்பளம் வாங்கிய சச்சின், ரேகா..!

நாடாளுமன்ற மாநிலங்களவையில் 12 நியமன எம்.பி-க்கள் உள்ளனர். கடந்த 2012-ம் ஆண்டு கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் இந்தி நடிகை ரேகா ஆகியோர் மாநிலங்களவை எம்.பி-க்களாக நியமிக்கப்பட்டனர்.

அவர்களின் பதவிக்காலம் முடிய உள்ள நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் மிகவும் குறைவான வருகைப்பதிவு கொண்டவர்களாக சச்சினும் ரேகாவும் உள்ளனர்.

இவர்கள் எம்.பி-க்களாக நியமிக்கப்பட்ட பிறகு 348 நாட்கள் செயல்பட்டுள்ளது. அதில் சச்சின் 23 நாட்கள், இந்தி நடிகை ரேகா 18 நாட்கள் மட்டுமே அவைக்கு வந்துள்ளனர்.

நியமன எம்.பி-க்களில் மிகக்குறைந்த வருகைப்பதிவு கொண்ட ரேகாவுக்குத்தான் அதிகமான தொகை செலவு செய்யப்பட்டுள்ளது. சம்பளம் மற்றும் இதர வகையில் அவருக்கு 65 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. அவர் அவைக்கு வந்த 18 நாட்களை வைத்துப் பார்க்கையில் ஒரு நாளைக்கு ரூ.3,60,000 செலவிடப்பட்டுள்ளது.

சச்சின் டெண்டுல்கருக்கு 58.8 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

5 ஆண்டுகால பதவிக்காலத்தில் சச்சின் டெண்டுல்கர் 12 கேள்விகளை அவையில் கேட்டுள்ளார். ரேகா ஒரு கேள்வி கூட கேட்டதில்லை. இருவரும் ஒரு விவாதத்தில் கூட பங்கேற்றதில்லை.

நியமன எம்.பி-க்களாக இருந்தாலும் அவர்களுக்கும் சில கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். அவை விவாதங்களில் கலந்துகொள்ளவில்லை என்றால் ஊதியம் வழங்குவதில் கட்டுப்பாடு போன்றவற்றை விதிக்க வேண்டும் என அரசியல் ஆர்வலர்களும் மக்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஒவ்வொரு வேலை உணவிற்கும் வாழ்க்கையுடன் போராடிக் கொண்டிருக்கும் உழைப்பாளிகள் வாழும் நாட்டில் எந்தவித வேலையும் செய்யாதவர்களுக்கு லட்சக்கணக்கில் ஊதியம் வழங்குவது அபத்தமான ஒன்று என எதிர்ப்புக் குரல் வலுக்கிறது.



முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...