News
Loading...

பி.வி. சிந்துவுக்கு குரூப்-1 நிலையிலான அரசு வேலை: ஆந்திர சட்டசபையில் மசோதா நிறைவேற்றம்

பி.வி. சிந்துவுக்கு குரூப்-1 நிலையிலான அரசு வேலை: ஆந்திர சட்டசபையில் மசோதா நிறைவேற்றம்

டந்தாண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் விளையாடிய பேட்மிண்டன் வீராங்கணை பி.வி.சிந்து வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார். பதக்கம் வென்ற சிந்துவுக்கு நாடு முழுவதுமிருந்து வாழ்த்துக்கள் குவிந்தது. மேலும், ஆந்திரப்பிரதேச அரசின் சார்பில் அவருக்கு 3 கோடி ரூபாய் பரிசு மற்றும் குரூப்-1 நிலையிலான அரசு வேலை வழங்கப்படும் என முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்திருந்தார்.

அறிவித்த கையோடு அம்மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதலும் வழங்கப்பட்டது. இந்நிலையில், அம்மாநில பணியாளர் சட்ட விதிகளின் படி பேட்மிண்டன் விளையாட்டு வீராங்கணை ஒருவருக்கு நேரடியாக அரசு வேலையை வழங்க இயலாது. எனவே, இதற்கான சட்டங்களை திருத்த மாநில அரசு முடிவெடுத்தது. 

பி.வி. சிந்துவுக்கு குரூப்-1 நிலையிலான அரசு வேலை: ஆந்திர சட்டசபையில் மசோதா நிறைவேற்றம்

அதன்படி, திருத்தப்பட்ட மசோதா அம்மாநில சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டு பின்னர் நிறைவேற்றப்பட்டது. மேலும், பி.வி.சிந்து அம்மாநிலத்தின் விளையாட்டு துறை தூதராக நியமிக்க முடிவு செய்துள்ளதாகவும் முதல்வர் சந்திரபாபு நாயுடு சட்டசபையில் தெரிவித்தார்.

பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்றார் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக்கில் தமிழகத்தில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சேர்ந்த தங்கவேலு மாரியப்பன் உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தார்.

தமிழக அரசு அவருக்கு வேலைவாய்பு வழங்காமல் வழக்கம் போல் எதையும் கண்டு கொள்ளாமல் உள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் திறமைகளை மதிக்கமாட்டார்கள். பல்லாயிரம் கோடி மூதலிட்டில் பல தொழிற்சாலைகள் அரசியல்வாதிகளின் லஞ்ச, ஊழலுக்கு பயந்து ஆந்திரா, தெலுங்கானா மாநிலத்திற்கு சென்றுவிட்டது. 

தமிழன்னு சொல்லிக்கற்கே வெக்கப்பட வேண்டிய சூழல் நிலவுகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...