News
Loading...

விவசாயம் மற்றும் சுயத்தொழில் பயிற்சி விவரங்கள்

விவசாயம் மற்றும் சுயத்தொழில் பயிற்சி விவரங்கள்

இலவசப் பயிற்சிகள் 

கோழி வளர்ப்பு

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மே 8-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை, ‘கோழி வளர்ப்பில் தொழில்முனைவோருக்கான பயிற்சி’ நடைபெற உள்ளது. முன்பதிவு அவசியம். அனுமதி இலவசம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04372 234012, 04372 234016

பூச்சிவிரட்டி தயாரிப்பு

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில் ஏப்ரல் 28-ம் தேதி ‘தேனீ வளர்ப்பு’, மே 9-ம் தேதி, ‘வெள்ளாடு வளர்ப்பு’, 11-ம் தேதி, ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’, 16-ம் தேதி ‘பஞ்சகவ்யா தாயாரிப்பு’, 18-ம் தேதி ‘பூச்சிவிரட்டி தயாரித்தல்’, 24-ம் தேதி ‘மருந்தில்லா மருத்துவம்’, 25-ம் தேதி ‘கறவை மாடு வளர்ப்பு’, 30-ம் தேதி ‘ஒருங்கிணைந்த கால்நடைப் பண்ணைகள் அமைத்தல்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. 

தொடர்புக்கு, 
செல்போன்: 77088 20505, 94885 75716. 

விவசாயம் மற்றும் சுயத்தொழில் பயிற்சி விவரங்கள்

கறவைமாடு வளர்ப்பு

கடலூர், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் மே 9-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’, 16-ம் தேதி ‘கறவை மாடு வளர்ப்பு’, 30-ம் தேதி ‘ஜப்பானிய காடை வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04142 290249.

கட்டணப் பயிற்சிகள்

காளான் வளர்ப்பு

கன்னியாகுமரி மாவட்டம், விவேகானந்த கேந்திரம், இயற்கை வள அபிவிருத்தித் திட்டத்தில் ஏப்ரல் 29-ம் தேதி ‘காளான் வளர்ப்பு பயிற்சி’ நடைபெற உள்ளது. பயிற்சிக் கட்டணம் `100. முன்பதிவு அவசியம்.

தொலைபேசி: 04652 246296

அலங்கார மீன் வளர்ப்பு!

நாமக்கல், வேளாண் அறிவியல் மையத்தில் மே 16-ம் தேதி ‘கரும்பில் பூச்சி நோய் மேலாண்மை’, 23-ம் தேதி, ‘வெள்ளாடு வளர்ப்பு’, 29-ம் தேதி, ‘அலங்கார மீன் வளர்ப்பு’, 30-ம் தேதி, ‘எண்ணெய்வித்துப்பயிர்களில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. கட்டணப்பயிற்சியாக மே 15-ம் தேதி, ‘இயற்கை வேளாண்மை சான்றுபெறும் முறை பற்றிய பயிற்சி’ நடைபெற உள்ளது. கட்டணம் `200 மட்டும், முன்பதிவு அவசியம். 

தொடர்புக்கு, 
தொலைபேசி: 04286 266345.

அறிவிப்பு

இந்த பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்த தகவல்களைத் தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும்.  

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...