News
Loading...

உலக சாதனை படைத்த மும்பை விமான நிலையம்

உலக சாதனை படைத்த மும்பை விமான நிலையம்

லகின் அனைத்து நாடுகளிலுள்ள சர்வதேச விமான நிலையங்களில் மிகவும் பிசியான விமான நிலையமாக மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் மும்பை விமான நிலையம் ஒரே ஒரு ரன்வேயை மட்டுமே கொண்டுள்ளது.

இந்த ஒரு ரன்வேயில் தான் பயணிகள் விமானம் மற்றும் சரக்கு விமானங்கள் விமான நிலையத்திற்குள் நுழைகின்றன. சராசரியாக 65 நொடிகளுக்கு ஒருமுறை ஏதாவது ஒரு விமானம் புறப்படவோ அல்லது வருகை தரவோ செய்கின்றன. ரன்வேயில் ஏதாவது பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டால் மட்டுமே, மாற்று ரன்வேயில் விமானங்கள் இறங்க அனுமதிக்கப்படுகின்றன.

உலக சாதனை படைத்த மும்பை விமான நிலையம்

உலகின் பிசியான விமான நிலையமாக மும்பை தேர்ந்தெடுக்கப்பட்டாலும் இது ஒரு வகையில் அரசுக்கு அவமானமான தேர்வாகும். உலகின் வெகுவான சர்வதேச விமான நிலையங்கள் இரண்டு ரன்வேக்களை கொண்டிருக்கும் நிலையில் மும்பை விமான நிலையம் ஒரு ரன்வேவை மட்டும் வைத்துக்கொண்டு இந்த சாதனையை படைத்துள்ளது. டெல்லி சர்வதேச விமான நிலையம் கூட இரண்டு ரன்வேக்களை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சராசரியாக ஒரு நாளில் மும்பை விமான நிலையம் 837 வருகை மற்றும் புறப்பாடுகளை சந்திக்கிறது. அதே வேளையில், லண்டன் காட்விக் விமான நிலையம் 757 வருகை மற்றும் புறப்பாடுகளை மட்டுமே சந்திக்கிறது. மேலும், மும்பை விமான நிலையம் கடந்த நிதியாண்டில் 45.2 மில்லியன் பயணிகளையும், காட்விக் விமான நிலையம் 44 மில்லியன் பயணிகளையும் கையாண்டுள்ளது.

இந்த சாதனை விமான நிலைய போக்குவரத்து கட்டுப்பாட்டு அலுவலர்களின் சிறந்த அர்ப்பணிப்பு உணர்வை காட்டுவதாக விமான நிலைய மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...