News
Loading...

அக்பரும் பாபரும் இந்தியாவை ஆக்கிரமித்தவர்கள்: உண்மையை ஏற்க ஆதித்யநாத் வேண்டுகோள்

அக்பரும் பாபரும் இந்தியாவை ஆக்கிரமித்தவர்கள்: உண்மையை ஏற்க ஆதித்யநாத் வேண்டுகோள்

“அக்பரும் பாபரும் படையெடுத்து வந்து நம் நாட்டை ஆக்கிரமித்தவர்கள் என்ற உண்மையை ஏற்க வேண்டும். மகாராணா பிரதாப் போன்ற தலைவர்கள் காட்டிய வழியை இளைஞர்கள் பின்பற்ற வேண்டும்” என்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார்.

16-ம் நூற்றாண்டு மேவார் மன்னர் ராணா பிரதாப்பின் 477-வது பிறந்த நாள் விழா, லக்னோவில் நேற்று முன்தினம் நடைபெற்றது. விழாவில் யோகி ஆதித்யநாத் பேசியதாவது:

மகாராணா பிரதாப், குரு கோவிந்த் சிங், சத்ரபதி சிவாஜி ஆகியோர் நமது முன்மாதிரி தலைவர்கள். அவர்கள் காட்டிய வழியை நாம் பின்பற்ற வேண்டும். ராணா பிரதாப்பிடம் இருந்து சுயமரியாதை, வல்லமை, நற்பண்புகள் ஆகிய பாடங்களை இளைஞர்கள் கற்க வேண்டும். அக்பர், அவுரங்கசீப், பாபர் போன்றோர் நம் நாட்டின் மீது படையெடுத்து வந்தவர்கள். நாட்டை ஆக்கிரமித்தவர்கள். எவ்வளவு விரைவில் இந்த உண்மையை நாம் ஏற்றுக் கொள்கிறோமோ அவ்வளவு விரைவில் நம் நாட்டின் அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும். நம் நாட்டின் வளமான வரலாற்றை நாம் உயர்வாக மதிக்க வேண்டும். வளமான வரலாற்றை உயர்வாக மதிக்கும் திறனில்லா சமூகத்தால் தனது நில எல்லையை ஒருபோதும் பாதுகாக்க முடியாது” என்றார்.

உ.பி. ஆளுநர் ராம் நாயக், வெளியுறவு இணை அமைச்சர் வி.கே.சிங் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...