News
Loading...

நாடு முழுக்க 13.5 கோடி பேரின் ஆதார் தகவல்கள் கசிந்துள்ளதாக ஆய்வு அறிக்கை

நாடு முழுக்க 13.5 கோடி பேரின் ஆதார் தகவல்கள் கசிந்துள்ளதாக ஆய்வு அறிக்கை

13.5 கோடி பேரின் ஆதார் தகவல்கள் கசிந்துள்ளதாக ஆய்வு அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. ஆதார் தகவல்கள் வெளியாவது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியதை அடுத்து, நான்கு அரசாங்க டேட்டாபேஸ்களை ஆதார் ஆணையம் ஆய்வு செய்த போது, இவற்றின் மூலம் சுமார் 13.5 கோடி பேரின் ஆதார் தகவல்கள் மற்றும் 10 கோடி பேரின் வங்கி கணக்கு சார்ந்த தகவல்கள் வெளியாகியிருக்கும் தகவல் தெரிய வந்துள்ளது. NSAP தளத்தில் அதிகப்படியான தகவல்களை டவுன்லோடு செய்யும் வசதியும் வழங்கப்பட்டுள்ளதால், தகவல்களை யார் வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்ய முடிவதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. இதையடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளதாக ஆதார் ஆணையம் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...