News
Loading...

ராணுவத்தினர் பாலியல் பலாத்காரம் செய்கின்றனர்: கம்யூனிஸ்ட் தலைவர் குற்றச்சாட்டு

ராணுவத்தினர் பாலியல் பலாத்காரம் செய்கின்றனர்: கம்யூனிஸ்ட் தலைவர் குற்றச்சாட்டு

ராணுவத்தினர் பெண்களைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்வதாக கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பாலகிருஷ்ணன், ராணுவத்துக்கு அதிகபட்ச அதிகாரங்களை அளித்தால், யாருக்கும் எந்த தீங்கையும் ராணுவம் இழைக்கும். அவ்வாறு கிடைக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி பெண்களைக் கடத்தி ராணுவத்தினர் பாலியல் பலாத்காரம் செய்வர். ராணுவத்துக்கான அதிகாரம் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள இடங்களின் நிலை இதுதான். ராணுவம் கண்ணூருக்கு வந்தால், பொதுமக்களுக்கும் ராணுவத்துக்கும் இடையே மோதல்தான் வெடிக்கும் என்று பேசினார்.

போர் போன்ற சூழ்நிலைகளில் முடிவெடுக்கும் அதிகாரம் ராணுவத்துக்கு அளிக்கப்படும் என்று பாதுகாப்புத் துறை பொறுப்பு வகிக்கும் அருண் ஜெட்லி கூறியிருந்தார். இந்தநிலையில், கொடியேறி பாலகிருஷ்ணன் இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்தினை தெரிவித்துள்ளார். 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...