News
Loading...

ஆர்டர் கொடுத்தால் வீட்டுக்கே வந்து மது சப்ளை செய்யப்படும்! அதிமுக அதிரடி!

ஆர்டர் கொடுத்தால் வீட்டுக்கே வந்து மது சப்ளை செய்யப்படும்! அதிமுக அதிரடி!

ரோடு: மது வாங்க இனி கியூவில் நிற்க வேண்டிய அவசியம் இருக்காது. ஆர்டர் கொடுத்தால் வீட்டுக்கே வந்து மது சப்ளை செய்யப்படும் என்று சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்யப்பட்டு சர்வீஸ் செய்யப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் இருந்த 153 அரசு மதுக்கடைகள் கடந்த மாதம் 1ம் தேதி முதல் மூடப்பட்டன. குறிப்பாக பவானி, பெருந்துறையில் செயல்பட்டு வந்த அனைத்து கடைகளும் மூடப்பட்டதால் குடிமகன்கள் பல கிலோ மீட்டர் தூரம் சென்று மது அருந்த வேண்டிய நிலையில் உள்ளனர். ஆங்காங்கே திறக்கப்பட்டுள்ள கடைகளிலும் கடும் கூட்ட நெரிசல் நிலவுவதால் பல மணி நேரம் காத்திருந்தால் மட்டுமே சரக்கு கிடைக்கும் என்ற நிலை இருந்து வருகிறது.

இந்நிலையில் குடிமகன்களின் வசதிக்காக டோர் டெலிவரி சர்வீஸ் வசதி ஈரோட்டில் தொடங்கப்பட்டுள்ளது. ஈரோட்டில் ‘பிக் அன்ட் டிராப்’ என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த டோர் டெலிவரி சர்வீசுக்கு சர்வீஸ் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒரு பாட்டிலுக்கு (குவார்ட்டர், ஆப், புல் என எதுவாக இருந்தாலும்) ரூ.80 சர்வீஸ் கட்டணம் கொடுத்தால் போதும். வீட்டிற்கே வந்து டெலிவரி செய்யப்படும் என்று சமூக வலை தளங்களில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து பிக் அன்ட் டிராப் சர்வீஸ் சென்டர் ஊழியர்களிடம் கேட்ட போது, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஓட்டல்களில் உணவு வாங்கி வருவதற்காக இந்த சர்வீஸ் சென்டர் தொடங்கினோம். 

ஆனால் கோர்ட் உத்தரவுப்படி மதுக்கடைகள் மூடப்பட்ட பிறகு மதுக்கடைகளில் கூட்டம் நிரம்பி வழிவதையறிந்து மதுவகைகளையும் டோர் டெலிவரி செய்யலாம் என்று முடிவு செய்து கடந்த நான்கு நாட்களாக சமூக வலைதளங்களில் விளம்பரப்படுத்தினோம். நாங்கள் எதிர்பார்த்ததை விட பல மடங்கு அழைப்புகள் வந்தது. ஈரோட்டில் இருந்து பவானி வரை நாங்கள் மதுபானங்களை டெலிவரி செய்ய முடிவு செய்துள்ளோம். டெலிவரி கட்டணமாக ஒரு பாட்டிலுக்கு ரூ.80 கட்டணம் வசூலிக்கிறோம். மதுபிரியர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. நேற்று "மே 1" விடுமுறை தினம் என்பதால் ஏராளமான அழைப்புகள் வந்தன என்றனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...