News
Loading...

சென்னை திருமங்கலம்-நேருபூங்கா இடையே சுரங்க மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்

சென்னை திருமங்கலம்-நேருபூங்கா இடையே சுரங்க மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்

சென்னை திருமங்கலம் - நேரு பூங்கா இடையே சுரங்க மெட்ரோ ரயில் சேவை இன்று (ஞாயிறு) தொடங்கப்பட்டது. 

மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இன்று ரயில் சேவையை தொடங்கி வைத்தனர்.

சென்னை திருமங்கலம்-நேருபூங்கா இடையே சுரங்க மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்

மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், தமிழக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் தொடக்க விழாவில் கலந்து கொண்டனர்.

சென்னை திருமங்கலம்-நேருபூங்கா இடையே சுரங்க மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்

சுமார் 7.4 கிமீ தூரம் கொண்ட இந்த சுரங்க ரயில் பாதையில் 7 ரயில் நிலையங்கள் உள்ளன. சென்னை திருமங்கலத்திலிருந்து நேருபூங்காவுக்கு இந்தச் சுரங்க ரயில் மூலம் ஏழரை நிமிடத்தில் வந்து சேர முடியும்.

இத்திட்டத்தின்படி முதற்கட்டமாக 10 நிமிடத்திற்கு ஒரு ரயில் இயக்கப்படவுள்ளது. கூட்ட நெரிசலைப் பொறுத்து கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளாது.

இந்த ரயில் சேவை முழுதும் தொடக்கம் காணும்போது நேரு பார்க் முதல் சென்னை விமான் நிலையம் வரையிலான 17 கிமீ தூரத்திற்கு ரூ.60 கட்டணமாகும். தற்போது சாதாரண வகுப்புக் கட்டணம் ரூ.10 முதல் ரூ.50 வரை உள்ளது, சிறப்பு வகுப்புக்கான கட்டணம் ரூ.20 முதல் ரூ.100 ஆக உள்ளது.

2012-ல் இந்த மெட்ரோ ரயில் சேவைத் திட்டம் தொடங்கப்பட்டது முதல் 3-வது ரயில் சேவைப் பாதை திறக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கோயம்பேடு - ஆலந்தூர் இடையேயும் சின்னமலை - விமான நிலைய மெட்ரோ ரயில் சேவைகள் தொடங்கப்பட்டு இயங்கி வருகின்றன.

தொடங்கி வைத்து பேசிய மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு “சென்னை மெட்ரோ ரயில் திட்டம் ஜெயலலிதாவின் கனவு” என்றார்.

விழாவில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, “சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்ட 108கிமீ திட்டத்துக்கான அனுமதி மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது என்று கூறினார். மேலும் முதற்கட்ட மெட்ரோ ரயில் சேவைத் திட்டம் 2018-ல் முழுதும் நிறைவடையும் என்றார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...