News
Loading...

உடையால் தோற்றுப் போன சிறுமி!

உடையால தோற்றுப் போன சிறுமி!

திறமையான விளையாட்டு வீரர், விளையாடாமலே தோற்றுப்போனால் எப்படியிருக்கும்? அந்தச் சிறுமிக்கும் அதுவேதான் நிகழ்ந்தது. மலேசியாவின் புட்ராஜயா நகரில் நடைபெற்ற 2017ம் ஆண்டிற்கான பள்ளிகள் பங்கேற்கும் செஸ் போட்டியில் பெயர் வெளியிடாத அந்த 12 வயது சிறுமியும் பங்கேற்றார். ஒவ்வொரு லெவலையும் புத்திசாலித்தனமாகக் கடந்தார். 

ஆனால், திடீரென போட்டி இயக்குநரிடமிருந்து ஓர் அழைப்பு. ‘நீங்கள் அணிந்துள்ள ஆடை மிகவும் கவர்ச்சியாக உள்ளது. உடனே போட்டியிலிருந்து வெளியேறுங்கள்...’ என்று கூறி வலுக்கட்டாயமாக அவரை வெளியேற்ற, அவமானத்தில் முகம் சுண்டிப்போனது அச்சிறுமிக்கு. உடனே சிறுமியின் பயிற்சியாளரான கவுசல் காந்தார், சமூகவலைத்தளத்தில் சிறுமியின் ‘கவர்ச்சி’ உடையை வெளியிட்டார். 

முழங்கால் வரை நீண்ட நாகரிக பாவாடை அது. சோஷியல் தளங்களில் மக்கள் சிறுமிக்கு ஆதரவாக, விளையாட்டு இயக்குநரை வறுத்தெடுக்க, ‘நான் கவர்ச்சி உடை என்ற வார்த்தையை பயன்படுத்தவே இல்லை. அந்தச் சிறுமி யாரென்றே எனக்குத் தெரியாது...’ எனச் சமாளிக்கிறார்!        

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...