News
Loading...

சென்னையில் 14 வயது சிறுமி பலாத்காரம்..!

சென்னையில் 14 வயது சிறுமி பலாத்காரம்..!

சென்னை ஓட்டேரி பகுதியில் தனியாக அம்மாவுடன் வசித்து வந்த சிறுமியை மிரட்டி பலாத்காரத்தில் ஈடுபட்டு வந்த கார்பென்டரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை ஓட்டேரி பகுதியை சேர்ந்தவர் ராம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவருக்கு மனைவி மற்றும் தாரா (14) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மகள் உள்ளார்.

ராம் சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் தாரா தாய் பாதுகாப்பில் வளர்ந்து வருகிறார். இந்நிலையில், தாராவுக்கு சில நாட்களுக்கு முன்னர் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனையறிந்த தாய் தாராவை உடனடியாக கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்த்தார்.

தாராவை பரிசோதனை செய்தபோது அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. மேலும், கர்ப்பம் கலைந்ததால் வயிற்று வலி ஏற்பட்டு ரத்த போக்கும் அதிகளவு வெளியேறியுள்ளது.

இதனை கேட்ட தாராவின் தாய் அதிர்ச்சியடைந்தார். இது பற்றி தாராவிடம் உறவினர்கள் கேட்டபோது தன்னை மிரட்டி கார்பென்டர் மாரி பல முறை பலாத்காரம் செய்ததாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தாராவின் தாய் வேப்பேரி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் மாரியை போலீசார் கைது செய்தனர்.

போலீசார் மாரியிடம் விசாரித்தபோது அவர் பல திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளார்: தாராவின் தாய் வீட்டு வேலை செய்வதற்காக காலையில் சென்றால் மாலையில்தான் மறுபடியும் வீடு திரும்புவார்.

இதனால் எப்பவும் தாரா மட்டும் வீட்டில் தனியாக இருப்பார். நான் அவ்வப்போது அவரது வீட்டை நோட்டமிட்டு வந்தேன். ஒரு நாள் சுதாவை வலுக்கட்டாயமாக மிரட்டி உல்லாசமாக இருந்தேன்.

அதனை வெளியில் யாரிடமாவது சொன்னால் உங்க குடும்பத்தை கொலை செய்துவிடுவேன் மிரட்டினேன். இதனை சாதகமாக பயன்படுத்தி பல முறை தாராவிடம் உல்லாசத்தில் ஈடுபட்டு வந்தேன். இதனால் தாரா 6 மாதம் கர்ப்பமானார். இவ்வாறு அவர் போலீசில் கூறினார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...