News
Loading...

ரயிலில் டெபிட் கார்டு மூலம் உணவு வாங்குவோருக்கு 5% உடனடி தள்ளுபடி!

ரயிலில் டெபிட் கார்டு மூலம் உணவு வாங்குவோருக்கு 5% உடனடி தள்ளுபடி!

யில் மற்றும் ரயில் நிலையங்களில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட ஸ்டால்களில் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் வாங்கும் உணவுகளுக்கு 5 சதவீதம் தள்ளுபடி வழங்க இந்திய ரயில்வே துறை முடிவுசெய்துள்ளது.

டிஜிட்டல் மற்றும் ரொக்கமில்லா பணப் பரிவர்த்தனைக்கு ரயில்வேயில் உள்ள கேட்டரிங் சேவை தொடர்பான பணிகளைப் இணைக்க இந்திய ரயில்வே பரிசீலித்து வருகிறது. இதனை ஊக்குவிக்க ரொக்கமில்லா பணப்பரிவர்த்தனை செய்வோருக்கு 5 சதவிகிதம் உடனடி தள்ளுபடி வழங்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதத்தில் பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை தொடர்ந்து, டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதற்கு மக்களை ஊக்குவிப்பதில் மத்திய அரசு தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது. டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிப்பதற்காக  இணையத்தளத்தில்  டிக்கெட் முன்பதிவு செய்வதன் மூலம் ரயில்வே கட்டண தள்ளுபடியால், ரூ.500 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் மட்டும் இத்தகைய டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை வசதி செய்யப்பட்டுள்ளது. இதர ரயில்களில் பணப்பரிமாற்றம் மட்டுமே என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.