News
Loading...

கலைஞர் வைரவிழா அழைப்பிதழ்

கலைஞர் வைரவிழா அழைப்பிதழ்

சந்திப்பு நடக்குமா?

கருணாநிதியின் சட்டமன்றப்பணி வைர விழாவையும், அவரது 94-வது பிறந்த நாள் விழாவையும் சேர்த்து ஜூன் 3-ம் தேதி சென்னையில் பிரமாண்டமாகக் கொண்டாட ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், புதுவை முதல்வர் நாராயணசாமி, அகில இந்தியத் தலைவர்களான லாலு பிரசாத் யாதவ், சரத் பவார், பரூக் அப்துல்லா, சீதாராம் யெச்சூரி, டி.ராஜா ஆகியோர் அன்றைய தினம் சென்னையில் குவிகிறார்கள். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை வரவழைக்க ஏற்பாடு நடந்தது. ஆனால், அவருக்கு ஏற்கெனவே ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிகள் இருந்ததால், தனது கட்சியின் சீனியர் தலைவர் டெரிக் ஓ பிரையனை அனுப்பி வைக்கிறார். இந்தத் தலைவர்களுக்கு அன்றைய தினம் மதியம், சென்னை ஹோட்டல் ஒன்றில் ஸ்டாலின் விருந்து தருகிறார். மருத்துவர்கள் அனுமதி தந்தால், இவர்களில் ராகுல் உள்ளிட்ட சில தலைவர்கள் மட்டும் கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியை பார்க்கக்கூடும்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...