News
Loading...

இது ஆல்கஹால் எலி!

இது ஆல்கஹால் எலி!

ந்தியாவில் மதுவிலக்கு என்ற வார்த்தையே கேலிக்கூத்தாக மாறியுள்ள சூழலில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. மதுவிலக்கு சட்டப்படி கோடவுனில் வைத்திருந்த பறிமுதலான மதுபாட்டில்கள் எங்கே... என்று பீகார் போலீசாரிடம் பத்திரிகைகள் கேட்டிருக்கின்றன. இதற்கு அவர்கள் சொன்ன விளக்கத்தை கேட்டுத்தான் உலகமே வயிறு புண்ணாகும்படி சிரித்துக்கொண்டிருக்கிறது. 

பீகாரில் மதுவிலக்கு அமலான கடந்த 13 மாதங்களில் பிடிபட்ட மதுபானங்களின் அளவு 9.15 லட்சம். இது குறித்து செய்தி வெளியிட்ட உள்ளூர் பத்திரிகை கேட்ட கேள்வியில்தான் போலீஸ்காரர்கள் கொத்தாக மாட்டினர். கோடவுனில் வைத்திருந்த பறிமுதலான மதுபாட்டில்கள் எங்கே? என்றபோது, அதனை சரக்கு வெறி கொண்ட எலிகள் குடித்துத் தீர்த்துவிட்டன என்று பதிலளித்தனர் பீகார் போலீசார். எலிகள் டைம்டேபிள் போட்டு குடித்த மதுபானங்களின் அளவு மட்டும் 9 லட்சம் லிட்டர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!    

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...