News
Loading...

கோவை வனப்பகுதியில் கடும் வறட்சி: தண்ணீர் தேடிவந்த 4 வயது ஆண்யானை உயிரிழப்பு

கோவை மாவட்டம் சிறுமுகை வனப்பகுதியில் கடும் வறட்சி : தண்ணீர் தேடிவந்த 4 வயது ஆண்யானை உயிரிழப்பு

கோவை மாவட்டம் சிறுமுகை வனப்பகுதியில் வறட்சி காரணமாக தண்ணீர் தேடி வந்த 4 வயது ஆண் யானை உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது. டேம்காடு வனப்பகுதியில் உயிரிழந்த யானையை சுற்றிநின்ற பிற யானைகளை காட்டுப் பகுதிக்குள் வனத்துறையினர் விரட்டினர். இதன் பின்னர் மருத்துவ பரிசோதனை செய்து அங்கேயே குழி தோண்டி யானை அடக்கம் செய்யப்பட்டது. வறட்சி, உணவு தட்டுப்பாடு காரணமாக சிறுமுகை வனப்பகுதியில் கடந்த 3 மாதத்தில் 4 யானைகள் உயிரிழந்துள்ளன. 

தொடர்ச்சியாக பருவ மழை பொய்த்து போனதால் கோவை மாவட்ட வனப்பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் சிறுமுகை காட்டுப்பகுதியில் வனத்துறையினர் தண்ணீர் தொட்டி அமைத்துள்ளதோடு மருந்து கலவைகளையும் வைத்துள்ளனர். இருப்பினும் கோடை காலத்தில் யானைகளை எளிதில் தாக்கும் ஆந்தார்க்ஸ் நோய்  பரவாமல் தடுக்க வேண்டும் என்பது வன உயிரின ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...