News
Loading...

ஆன்லைனில் ஆர்டர் செய்தால் வீடு தேடி வரும் மீன்கள்: தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகம் புதிய ஏற்பாடு

ஆன்லைனில் ஆர்டர் செய்தால் வீடு தேடி வரும் மீன்கள்: தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகம் புதிய ஏற்பாடு

சென்னையில் உள்ளவர்கள் ஆன் லைன் மூலம் ஆர்டர் செய்தால் வீடு தேடி வந்து மீன்களை அளிக்கும் புதிய வசதியை தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகம் ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ள மீன் மற்றும் மீன் உணவுகளை இணையதளம் மூலம் விற்பனை செய்யும் வசதியை மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னையில் நேற்று தொடங்கி வைத்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகை யில் “மீன், இறால், நண்டு மற்றும் மீன் உணவுகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்வது நேற்று முதல் சென்னை மாநகரில் தொடங்கப்பட்டுள்ளது.

மீன்களை 044- 24956896 என்ற தொலைபேசி எண் மூலமாகவும், www.meengal.com என்ற இணையதளம் மூலமாகவும் ஆர்டர் செய்யலாம். சென்னை மக்களுக்கு மீன் உணவு வகைகள் எளிதில் கிடைக்க வேண்டும் என்பதற்காக, இந்த வசதி தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் மற்ற பகுதிகளுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்” என்றார்.

குறைந்தபட்ச ஆர்டர் ரூ.500

இது தொடர்பாக மீன்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “இணையதளம் வாயிலாக மீன் களை ஆர்டர் செய்ய விரும்புவோர் www.meengal.com என்ற இணைய தளத்தில் தங்கள் ஆர்டரை பதிவு செய்துகொள்ளலாம். அந்த இணையதளத்தில் என்னென்ன மீன் வகைகள் விற்பனைக்கு உள்ளன, அவற்றின் விலை, ஒவ்வொரு வகையிலும் எவ்வளவு இருப்பு உள்ளது என்பது போன்ற விவரங்களை அறியலாம். தூரத்தைப் பொருத்து அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரத்துக்குள் மீன்கள் டெலிவரி செய்யப்படும். விரைவில் சென்னை மாநகரம் முழுவதும் இந்த சேவை விரிவுபடுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், மீன்வளத் துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப்சிங் பேடி, மீன்வளத்துறை ஆணையர் பீலா ராஜேஷ், சென்னை மாவட்ட ஆட்சியர் அன்பு செல்வன், மயிலாப்பூர் சட்டப் பேரவை உறுப்பினர் ஆர்.நடராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...