News
Loading...

டெல்லி தனி நபர் வருமானம் தேசிய சராசரியை விட 3 மடங்கு அதிகம்

டெல்லி தனி நபர் வருமானம் தேசிய சராசரியை விட 3 மடங்கு அதிகம்

டெல்லியின் தனி நபர் வருமானம் 2016-17ம் ஆண்டில் தேசிய சராசரியை விட மூன்று மடங்கு அதிகமாக(ரூ.30,00,000) இருக்கும்  என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2016-17ம் ஆண்டுக்கான மாநில உற்பத்தி மதிப்பீடு குறித்த அறிக்கையை துணை முதல்வர் மணிஷ் சிசோடியா நேற்று முன்தினம் வெளியிட்டார். அதில், தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: டெல்லியின் தனிநபர் வருமானம் விரைவாக அதிகரித்து வருகிறது. இதன்படி, 2016-17ம் ஆண்டில் இது ₹ 3,30,000ஆக இருக்கும். முந்தைய ஆண்டு இது  ரூ.2,73,618 ஆக இருந்தது. இது ஆண்டு வளர்ச்சி 10.76 சதவீதமாக உள்ளதை உணர்த்துகிறது. முந்தைய ஆண்டு வளர்ச்சி 10.2 சதவீதமாக இருந்தது.

 டெல்லியின் தனி நபர் வருமானம் தேசிய சராசரியை விட மூன்று மடங்கு அதிகமாக இருக்கும். 2016-17ம் ஆண்டில் தேசிய சராசரி தனி நபர் வருமானம் ரூ.1,03,818 ஆக இருக்கும். மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில், டெல்லி முதலிடத்தில் உள்ளது. அடுத்து கோவா மாநிலம் (ரூ.2,70,150) மூன்றாவது இடத்தில் சண்டிகார் (ரூ.2,42,386) ஆக இருக்கும். தேசிய அளவில் 2015-16 ம் ஆண்டில் தனி நபர் வருமானம் ரூ.94,178 ஆகவும் 2016-17ல் ரூ.1,03,818 ஆகவும் இருக்கும். இதன் ஆண்டு வளர்ச்சி விகிதம் 10.2 சதவீதமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...