News
Loading...

சச்சின் படம் பார்த்த உற்சாகத்தோடு இங்கிலாந்து செல்லும் இந்திய அணி

சச்சின் படம் பார்த்த உற்சாகத்தோடு இங்கிலாந்து செல்லும் இந்திய அணி

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள், சச்சினின் வாழ்க்கை வரலாறு படத்தை பார்த்தபின் இன்று இங்கிலாந்து புறப்பட்டு செல்கின்றனர்.

சாம்பியன் கோப்பை கிரிக்கெட் வரும் 1ம் தேதி இங்கிலாந்தில் தொடங்க இருக்கிறது. இந்நிலையில் ஏற்கனவே திட்டமிட்டப்படி இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் விளையாடுவதற்காக இன்று இங்கிலாந்து புறப்பட்டு செல்கிறது. சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான சச்சின் எ பில்லியன் ட்ரீம்ஸ்’ நாடு முழுவதும் 5 மொழிகளில் நாளை மறுதினம் ரிலீசாக உள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து புறப்பட்டு செல்லும் கிரிக்கெட் வீரர்கள் இத்திரைப்படத்தைக் காண மும்பையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. விராட் கோலி உள்ளிட்ட வீரர்கள் இன்று மாலை திரைப்படத்தை பார்த்த பிறகு, இங்கிலாந்து புறப்பட்டுச் செல்கின்றனர்.

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ‘டாப் 8’ அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 1 முறை மோத வேண்டும். ‘லீக்‘ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் இரண்டு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை 4-ந்தேதியும், 2-வது ஆட்டத்தில் இலங்கையை 8-ந்தேதியும், கடைசி லீக் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை 11-ந்தேதியும் எதிர்கொள்கிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...