News
Loading...

காதலி வீட்டு முன் தூக்குப் போட்டுத் தொங்கிய இளைஞர்

காதலி வீட்டு முன் தூக்குப் போட்டுத் தொங்கிய இளைஞர்

வி மும்பையில் காதலி வீட்டின் முன் இளைஞர் ஒருவர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தைச் சேர்ந்த 26 வயது இளைஞர் கிசான் ராவல். நவி மும்பையின் நெருல் பகுதியில் தனியே வசித்து வந்திருக்கிறார். இவர் அந்தப் பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்த ஒரு பெண்ணின் மீது காதல் வயப்பட்டிருக்கிறார். அந்தப் பெண்ணை வீடு வரை பின்தொடர்ந்து சென்றிருக்கிறார். அதைப் பார்த்த அக்கம் பக்கத்தவர்கள் அவரை அங்கிருந்து விரட்டி அடித்துள்ளனர்.

இது தொடர்பாக அந்தப் பெண் நெருல் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலையில் அந்த வாலிபர் அந்தப் பெண்ணின் வீட்டின் முன் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். காலையில் வீட்டைத் திறந்ததும் அந்தப் பெண் பார்த்த அந்தக் காட்சி அவரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இது தொடர்பாக நெருல் காவல்நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்து, கிசான் ராவல் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...