News
Loading...

ராமாயணத்தில் சிக்ஸ் பேக் : ஆக்ரோஷ ராமரான, ராம் சரண்

ராமாயணத்தில் சிக்ஸ் பேக் : ஆக்ரோஷ ராமரான, ராம் சரண்

கோடிகளில் முதலீடு செய்து படமெடுக்கும் சூழல் தற்போது கோலிவுட், டோலிவுட், பாலிவுட்டை ஆக்ரமித்திருக்கிறது. பாகுபலி படத்தின் சமீபத்திய 1000 கோடி தாண்டிய வசூல் சாதனை இந்த நம்பிக்கையை தயாரிப்பாளர்களுக்கு அளித்திருக்கிறது. விரைவில் ரூ 500 கோடி செலவில் ராமாயணம் படம் உருவாக்கவுள்ளதாக தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் அறிவித்தார். 

சிரஞ்சீவியின் உறவுக்காரரான அல்லு அரவிந்த் தயாரிக்கும் இப்படத்தின் ஹீரோவாக நடிக்க பொருத்தமானவர் ராம் சரண்தான் என அவரது ரசிகர்கள் குரல் கொடுக்கத் தொடங்கி உள்ளதுடன், ஏற்கனவே ராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண் நடித்த மகதீரா படத்தில் அவர் தோற்றத்தை உதாரணமாக வைத்து சிக்ஸ் பேக் உடற்கட்டுடன் கையில் வில்லுடன் தோன்றும் ஆக்ரோஷமான ராமர் கெட்டப் போஸ்டர் வெளியிட்டுள்ளனர். ஆனால் இன்னமும் ஹீரோவையோ மற்றும் ஹீரோயின், தொழில் நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட யாரையுமோ தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக உறுதி செய்யவில்லை.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...