News
Loading...

இளம்பெண்னை முத்தமிட்ட வாலிபர்! பஞ்சாயத்து வழங்கிய நூதன தண்டனை! அடேங்கப்பா!

இளம்பெண்னை முத்தமிட்ட வாலிபர்! பஞ்சாயத்து வழங்கிய நூதன தண்டனை! அடேங்கப்பா!

பீகார் மாநிலம், பாட்னாவிலிருந்து 125 கி.மீ தொலைவில் பேகுசராய் மாவட்டத்தின் பக்ரி துணைப் பிரிவின் கீழ் மகாசாக் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் தவறு செய்பவர்களுக்கு பஞ்சாயத்து தீர்ப்பின் படியே தண்டனை வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அந்த கிராமத்தை சேர்ந்த 20 வயது இளம்பெண்ணை இளைஞர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து இரண்டு முறை முத்தமிட்டிருக்கிறார். இதையடுத்து அந்த இளம்பெண் கிராம பஞ்சாயத்தில் முறையிட்டிருக்கிறார்.

அந்த கிராமத்து வழக்கப்படி, ஒரு பெண்ணிற்கு விருப்பமில்லாமல் கட்டாயப்படுத்தி முத்தம் கொடுத்தால் ரூ.10,000 அபராதமாக விதிக்கப்படும்.

இதுகுறித்து பஞ்சாயத்தில் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில், அந்த இளைஞரின் பெயர் முகம்மது இர்ஷாத்(22) அவர் பண்ணை தொழிலாளி என்றும் தெரிய வந்தது. இதையடுத்து குற்றத்தை ஒப்புக் கொண்ட அந்த இளைஞருக்கு ரூ.20,000 அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டது.

பஞ்சாயத்தார் அளித்த தீர்ப்பிற்கு பாதிக்கப்பட்ட இளம்பெண் எதிர்ப்பு தெரிவித்தார். தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த என்னை வேறு யார் திருமணம் செய்வார்கள். அதனால் இர்ஷத்திற்கே திருமணம் செய்து வைத்து விடுங்கள் என கூறியுள்ளார்.

அதற்கு கிராம பஞ்சாயத்தார் முடியாது என்று கூறி, அந்த இளைஞருக்கு ரூ.20,000 அபராதம் வசூலித்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதிய போலீஸ் ஸ்டேஷனில் விசாரித்த போது, அந்த சம்பவம் நடந்தது எங்களுக்கு தெரியும். பஞ்சாயத்தில் ரூ.20,000 அபராதம் விதித்ததும் தெரியும். ஆனால் எங்களால் எதுவும் செய்யமுடியவில்லை.

அந்த இளைஞர் அர்ஷாத் மீது குற்ற வழக்குகள் உள்ளது. ஆனால் கிராம பஞ்சாயத்திலேயே பேசி முடித்து கொள்கிறார்கள். எங்களுக்கு தகவல் கிடைத்து சென்றாலும் பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுப்பதில்லை என்று தெரிவித்தனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...