News
Loading...

நிர்பயா போல் டெல்லியில் மற்றொரு இளம்பெண் ஓடும் காரில் பலாத்காரம்

நிர்பயா போல் டெல்லயில் மற்றொரு இளம்பெண் ஓடும் காரில் பலாத்காரம்

டெல்லியில் நிர்பயா என்ற இளம்பெண்ணை ஓடும் பஸ்சில் 6 பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்து கொலை செய்தது. இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு அளித்த தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் கடந்த வாரம் உறுதி செய்தது.

இந்த நிலையில் நிர்பயா போல டெல்லியில் மற்றொரு இளம்பெண் ஓடும் காரில் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லியின் புறநகரான குர்கானில் 17வது செக்டாரில் 22 வது இளம்பெண் தங்கியிருந்து வேலை பார்த்து வருகிறார். சனிக்கிழமை இரவு தனது தோழியுடன் டெல்லி கன்னட் பிளேசில் உள்ள கடைகளுக்கு சென்றிருந்தார்.

நள்ளிரவு 2 மணிக்கு அவர் குர்கானுக்கு திரும்பினார். 17வது செக்டாருக்கு வந்த இளம்பெண் வீட்டின் அருகில் சென்று விட்டார். அதற்குள் அந்த இளம்பெண்ணை 3 பேர் கும்பல் சுற்றி வளைத்தது. பிறகு காருக்குள் ஏற்றி கடத்தி சென்றனர்.

ஓடும் காரில் அந்த இளம்பெண்ணை 3 வாலிபர்களும் மாறி மாறி பலாத்காரம் செய்தனர். சுமார் 3 மணி நேரம் இளம்பெண் அந்த வாலிபர்களிடம் மாட்டி கொண்டு சிக்கி தவித்தார்.

பின்னர் அதிகாலை நேரத்தில் அந்த பெண்ணை டெல்லி நசப்கர் பகுதியில் காரில் இருந்து ரோட்டோரத்தில் வீசி சென்றனர். அந்த வழியாக வந்தவர்களின் உதவியுடன் அந்த பெண் போலீசில் புகார் அளித்தார்.

உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய போலீசார் தீபக் என்ற வாலிபரை அடையாளம் கண்டு கொண்டனர். மற்ற இருவரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

டெல்லியில் ஒவ்வொரு 4 மணி நேரத்திற்கும் ஒரு பெண் பலாத்காரம் செய்யப்படுகிறார். பலாத்காரம் செய்பவனுக்கு மரணத் தண்டனை விதிக்கும் வகையில் கடுமையான சட்டத் திருத்தம் கொண்டு வந்தால் மட்டுமே பெண்கள் நிம்மதியாக வாழ முடியும். 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...