News
Loading...

உயிரை பலி வாங்கும் சேலம் SKS மருத்துவமனை! உண்மையை போட்டு உடைக்கும் இளைஞர்!

உயிரை பலி வாங்கும் சேலம் SKS மருத்துவமனை!

மிழகத்தில் தனியார் மருத்துவமனைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறுகிய நாட்களில் பணக்காரன் ஆக என்ன வழி என்று யோசிப்போர் எல்லாம் உடனே மருத்துவமனை துவங்கி விடுகின்றனர்.

அரசு மருத்துவமனையில் அனைத்து வசதிகள் இருந்தாலும் டாக்டர்கள் சிகிச்சை செய்ய தாமதிக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு உள்ளதால் தனியார் மருத்துவமணையை நாடி செல்கின்றனர் பொதுமக்கள்.

தனியார் மருத்துவமனையில் ஏதாவது சிறு வியாதி என்று செல்வோரையும் வியாதியை அதிகப்படுத்தி, பல நாட்கள் வைத்து பணம் சம்பாதிப்பதும், இறந்தவர் உடலை வைத்து சீரியஸ் என கூறி பல நாட்கள் பணம் வசூலிப்பதும் என இப்படி நாளுக்கு நாள் புகார்கள் வந்த வண்ணமுள்ளது.



அப்படி ஒரு சம்பவம் சேலத்தில் நடந்துள்ளது. டூவீலர் விபத்தில் லேசான எலும்புமுறிவு ஏற்பட்டு, சேலம், புதுபஸ்டாண்ட் அருகேயுள்ள எஸ்.கே.எஸ்.,மருத்துவமனையில் முதியவர் ஒருவர் அனுமதிக்கப்பட்டார்.

காலில் லேசான எலும்பு முறிவு, பிளேட் வைத்து சரி செய்து விடலாம் என ஆறு நாட்கள் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. பின்னர் 10 நாட்கள் ஐ.சி.யு.,வார்டில் வைத்து பல காரணங்கள் கூறி, மருந்து மாத்திரை போக, தினமும் 40 ஆயிரம் கட்டணம் வசூலித்துள்ளனர்.

16 நாட்கள் கழித்து முதியவர் சீரியஸாக உள்ளதாக கூறி, வேறு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுங்கள் என கூறிவிட்டனர்.

முதியவரை பெங்களூரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதணை செய்த போது தான், சேலம் எஸ்.கே.எஸ்.,மருத்துவமனையில் தேவையற்ற சிகிச்சை அளித்து, முதியவர் உடல் நிலையை மோசமடைய செய்துள்ளனர் என தெரியவந்துள்ளது. 20 நாட்கள் கிகிச்சைக்கு பிறகு முதியவர் இறந்து விட்டார்.

சேலம், எஸ்.கே.எஸ்.,மருத்துவமனையில் பணத்திற்காக தேவையற்ற சிகிச்சை வழங்குவது வாடிக்கையாக நடந்து வருவதாகவும் பாதிக்கப்பட்ட முதியவரின் மகன் அரசுக்கு புகார் மனு அனுப்பிவிட்டு, மருத்துவமனை முன்பு இளைஞர்களை ஒன்று திரட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

இது போன்று பணத்திற்கு ஆசைப்பட்டு தேவையற்ற சிசிச்சை வழங்கும் மருத்துவமனைகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...