News
Loading...

டெலிவரியான செங்கல் வித் செருப்பு!

டெலிவரியான செங்கல் வித் செருப்பு!

டிசைன் டிசைனாக யோசித்து ஏமாற்றுவது என்ன சிம்பிள் வேலையா? குழந்தை டெலிவரிக்கு தவிக்காதவர்கள் கூட இன்று ஆன்லைனின்ஆர்டர் பொருட்களுக்கு பதற்றமாக நகம் கடித்து காத்திருக்கிறார்கள். வாசலில் டெலிவரியான பார்சலை ஆசையோடு திறந்தால் செங்கல்லும் செருப்பும் அவர்களுக்கு வணக்கம் சொன்னால் எப்படியிருக்கும்? 

இணையத்தில் பொருட்கள் விற்கும் ஷாப்சிஜே டிவிக்கும் அதுதான் பிராப்ளம். ஆபீசில் டஜன் கணக்கில் ரிங்கடித்த போன்கால்கள் அனைத்தும், சொல்லி வைத்தது போல, நீங்கள் டெலிவரி கொடுத்த பார்சலில் செங்கல்தான் இருக்கிறது என ரிப்பீட்டாக கூறிக்கொண்டே இருந்தால் எப்படி? 

பீதியான கம்பெனி, தன் பிராண்ட் அம்போவாகிவிடும் என போலீசில் உடனே புகார் கொடுத்தது. போலீசின் அதிரடி வலைவீச்சில் மாட்டியவர்தான் முன்னாள் கால்சென்டர் ஊழியரான கிஷான் சிங். 34 கஸ்டமர்களின் பார்சல்களை அமுக்கி, அதில் பொருட்களுக்கு பதில் செங்கற்களை வைத்து இவர் செய்த டிஜிட்டல் சேட்டையில் கிடைத்த லாபம் ஜஸ்ட் 1.85 லட்சம்! 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...