News
Loading...

அரசு பள்ளியில் வழங்கப்பட்ட மதிய உணவில் இறந்த நிலையில் குட்டி பாம்பு

அரசு பள்ளியில் வழங்கப்பட்ட மதிய உணவில் இறந்த நிலையில் குட்டி பாம்பு

ரிதாபாத்; அரியானாவில் உள்ள அரசு பள்ளியில் வழங்கப்பட்ட மதிய உணவில் இறந்த நிலையில் குட்டி பாம்பு கிடந்தது மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியானா மாநிலம் பரீதாபாத்தில் ராஜ்கீயா பெண்கள் மேல்நிலை பள்ளி உள்ளது. அங்கு மதிய உணவு வழங்கப்பட்டது. உணவை ருசி பார்க்க தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் சென்றனர். அப்போது உணவில் இறந்த நிலையில் குட்டி பாம்பு கிடந்ததை கண்டுபிடித்தனர். இதனையடுத்து அங்கு சாப்பாடு வாங்கிய மாணவிகளை சாப்பிட வேண்டாம் என எச்சரித்தனர். ஆனால், சாப்பாட்டை சில மாணவிகள் சாப்பிட ஆரம்பித்து விட்டனர். ஆனால், அவர்கள் வாந்தி எடுத்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆசிரியர்கள் உயரதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். உணவு ஏற்பாடு செய்த அமைப்புக்கும் இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...