News
Loading...

யோகி ஆதித்யநாத்தின் அடுத்த அதிரடி: ஆசிரியர்களுக்கு அட்டெண்டென்ஸ் எடுக்க போகும் மாணவர்கள்

யோகி ஆதித்யநாத்தின் அடுத்த அதிரடி : ஆசிரியர்களுக்கு அட்டெண்டென்ஸ் எடுக்க போகும் மாணவர்கள்

க்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் சமீபத்தில் நடந்த தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. முதல்வராக பொறுப்பேற்ற யோகி ஆதித்யநாத் அங்கு பல்வேறு அதிரடியான உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். அரசு அலுவலகங்களில் துப்பினால் அபராதம், வருகை நேரம் குறித்து பயோமெட்ரிக் முறை, அதிகாரிகள் மாற்றம், 15 பொது விடுமுறை தினங்கள் ரத்து என்பது உள்பட பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் புகைபடங்கள் அந்தந்த பள்ளிகளில் பெரிதாக ஒட்டப்பட வேண்டும் என உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத் உத்தரவிட்டுள்ளார். ஒட்டப்பட்டுள்ள படங்களில் உள்ள ஆசிரியர்கள் சரியாக பள்ளிக்கு வருகிறார்களா என அதிகாரிகள் சோதனையின் போது மாணவர்களிடம் கேட்டு உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார். உத்தரப்பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் சரியாக பணிக்கு வராததால் கல்வியின் நிலைமை மிக மோசமாக உள்ளது. அதுமட்டுமில்லாமல் அதிகமாக சம்பளம் வாங்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பாடம் எடுக்க தங்களுக்கு பதிலாக வேறு யாரையாவது அனுப்புகிறார்கள் என குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. 

இந்த நிலையில் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியரின் புகைப்படங்கள் அந்தந்த பள்ளிகளில் பெரிதாக ஒட்ட வேண்டும் எனவும் மாணவர்களிடம் படத்தில் உள்ள ஆசிரியர்கள் பாடம் எடுக்கிறார்களா என்று அடிக்கடி ஆய்வு செய்து உறுதிபடுத்த வேண்டும் எனவும் யோகி உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் இனி வேலை பார்க்காமல் ஆசிரியர்களால் சம்பளம் வாங்க முடியாது எனவும் கல்வி தரத்தை முன்னேற்ற அரசு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் எனவும் யோகி ஆதித்தியநாத் தெரிவித்துள்ளார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...