News
Loading...

உறுதியளித்த வசதிகளை செய்து தராவிட்டால் சிறை: கட்டுமான நிறுவனங்களுக்கு வெங்கய்ய நாயுடு எச்சரிக்கை

உறுதியளித்த வசதிகளை செய்து தராவிட்டால் சிறை: கட்டுமான நிறுவனங்களுக்கு வெங்கய்ய நாயுடு எச்சரிக்கை

ட்டுமான நிறுவனங்கள் உறுதி யளித்த வசதிகளைச் செய்து தரா விட்டால் அபராதம் செலுத்து வதுடன் சிறைக்கு செல்ல நேரிடும் என மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு எச்சரித்துள்ளார்.

தமிழகத்தில் நகராட்சி நிர்வாகம், வீட்டு வசதித் துறை களின் கீழ் மத்திய அரசின் நிதியை பெற்று செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் மத்திய அரசின் திட்டங்கள் தொடர்பாக முதல்வர் கே.பழனிசாமி, அமைச்சர்கள், அதிகாரிகளுடன் மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு ஆலோசனை நடத்தினார். அப்போது ரியல் எஸ்டேட் சட்ட அமலாக்கம் தொடர்பாக வெங்கய்ய நாயுடு கூறியதாவது:

ரியல் எஸ்டேட் சட்டத்தை பொறுத்தவரை, தமிழக அரசு தற்போது வரைவு விதிகளைத் தயாரித்துள்ளது. விரைவில் இறுதி விதிகள் அமலாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. மத்திய அரசு ரியல் எஸ்டேட் சட்டத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துவிட்டது. இதன்படி மாநில அரசுகள் தேவையான வரைவு விதிகளை உருவாக்கி, அதன் மீது கருத்துகளைப் பெற்று இறுதி விதிகளை இந்த மாத இறுதிக்குள் அமல்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் இதில் ஒழுங்கு முறை ஆணையங்கள், மேல்முறையீட்டு அமைப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் விளக்கி கூறியுள்ளேன். அதை மாநில அரசு ஏற்று விரைவில் நியமிப்பதாக உறுதியளித்துள்ளார்கள். இல்லா விட்டால், பத்திரப்பதிவுகள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. இதனால் கட்டுமான திட்டங்கள் தொடங்க முடியாத நிலை ஏற்படும்.

அந்தமான் நிகோபார் தீவுகளையும் தமிழக ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய வரம்புக்குள் கொண்டுவரும்படி கேட்டுக் கொண்டோம். அதை ஒப்புக் கொண்டதுடன், தமிழக சட்டப்பேரவையில் இது தொடர் பாக தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் உறுதியளித்துள்ளார்.

தற்போது நடந்து கொண்டிருக் கும் கட்டுமானத் திட்டங்களும், எதிர்காலத்தில் வரப்போகும் திட்டங்களும் இந்த சட்டத்தின் வரம்புக்குள் வரும். விதிகளை மீறி கட்டுமான நிறுவனங்கள் எதையும் செய்யக் கூடாது. வாடிக்கையாளர்களுக்கு நீங்கள் என்ன உறுதியளித்துள்ளீர்களோ அதை செய்து கொடுக்க வேண் டும். விளம்பரங்களில் என்ன கூறி யுள்ளீர்களோ அதை நிறைவேற்றித் தரவேண்டும். நீங்கள் குறித்த நேரத்திலும் கட்டிக் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அபராதம் கட்ட வேண்டி வரும். விதிகளை மீறி செயல்பட்டால் அவர்கள் சிறைக்கு செல்ல வேண்டி வரும். பொதுமக்களுக்கு சிறந்த சேவை கிடைக்க வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். பொதுமக்களுக்காக பிரதமர் சமீபத்தில் வட்டி சலுகைகளை அறிவித்துள்ளார். தமிழக மக்களுக்கு இந்த சட்டம் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.

இவ்வாறு வெங்கய்ய நாயுடு கூறினார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...