News
Loading...

வறட்சியைப் போக்கிய வாட்ஸ்அப் நண்பர்கள்!

வறட்சியைப் போக்கிய வாட்ஸ்அப்  நண்பர்கள்!

இன்றய சூழ்நிலையில், தமிழகத்தை வரலாறு காணாத வறட்சி வாட்டி வதைத்துவருகிறது. நிலத்தடி நீர் குறைந்து, மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுவருகின்றனர். வறட்சியின் பிடியில் சிக்கி, குடிநீருக்கு வழி இல்லாமல் தவிக்கும் ஒரு கிராமத்துக்குத் தண்ணீர் கிடைக்கச்செய்ய,  ’உண்மை, உழைப்பு, உயர்வு’ என்ற வாட்ஸ்அப் குரூப் நண்பர்கள் உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.

வறட்சியைப் போக்கிய வாட்ஸ்அப்  நண்பர்கள்!

இதைப் பற்றி  குரூப் அட்மின் சோம சுந்தரத்திடம் கேட்டபோது, "சிவகங்கை மாவட்டம், திருபுவனம் தாலுக்காவிலுள்ள காணூர்தான் எங்க ஊர். வைகை ஆற்றங்கரையில் இருக்கும் பசுமையான கிராமம். இந்த வருடம் பருவ மழை சரிவர பெய்யாததாலும், சில தனியார் நிறுவனங்கள் ஆற்றுப் படுக்கைகளில் மணல் அள்ளிய காரணத்தாலும் நிலத்தடி நீர் குறைந்து, குடிநீருக்கே பெரும் பஞ்சம் ஏற்பட்டது. இந்தப் பிரச்னையை எப்படிச் சரிசெய்வது என்று யோசித்தபோதுதான், வாட்ஸ்அப்மூலம் நண்பர்களிடம் உதவி கேட்கலாம் என்ற யோசனை தோன்றியது. உள்ளூர், வெளியூரிலிருக்கும் நண்பர்கள் அனைவரையும் ’உண்மை, உழைப்பு, உயர்வு’ என்ற வாட்ஸ்அப் குரூப் மூலம், மூன்று வருடங்களாகப் பல நல்ல விஷயங்களைச் செய்துவருகிறோம். இந்தப் பிரச்னையைப் பற்றி அந்த குரூப்பில் கூறினேன். உடனே நண்பர்கள் அனைவரும் தங்களால் முடிந்த பண உதவி செய்தார்கள். அதன்மூலம் கிடைத்த 1.5 லட்சம் ரூபாயை வைத்து தண்ணீர் டேங்க் வாங்கி, ஆற்றுப்படுக்கையிலிருந்து தண்ணீர் கொண்டுவந்து ஊர் மக்களுக்குக் கொடுத்துவருகிறோம்." என்றார். அரட்டை அடிப்பதற்காகவும், ஃபார்வேர்டு மெசேஜ்கள் அனுப்ப மட்டுமே உபயோக்கப்படுத்தும் வாட்ஸ்அப்பை, இதுபோன்று மக்கள் பணிக்காகப் பயன்படுத்தும் ’உண்மை, உழைப்பு, உயர்வு’ வாட்ஸ் அப் நண்பர்களை வாழ்த்தலாம்!..

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...