News
Loading...

குற்ற நடவடிக்கைகளைக் கண்காணிக்க யோகி ஆதித்யநாத் நேரடி பார்வையில் சிறப்புப் பிரிவு

குற்ற நடவடிக்கைகளைக் கண்காணிக்க யோகி ஆதித்யநாத் நேரடி பார்வையில் சிறப்புப் பிரிவு

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் நேரடிப் பார்வையில் குற்றக் கண்காணிப்பு நடவடிக்கைக்காக சிறப்பு பிரிவு ஒன்று தொடங்கப்படுவதாக உ.பி. மாநில எரிசக்தி துறை அமைச்சர் ஸ்ரீகாந்த் சர்மா தெரிவித்துள்ளார்.

உ.பி.யில் பாஜக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு குலைந்துள்ளது என்று சமாஜ்வாதி விமர்சனம் செய்ததையடுத்து கூறிய ஸ்ரீகாந்த் சர்மா, “தங்களுடன் குற்றவாளிகளையும், பாலியல் பலாத்காரர்களையும் வைத்திருக்கும் சமாஜ்வாதி இதனைக் கூறக்கூடாது, அந்தக் கட்சிதான் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

எனவே முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் நேரடி கண்காணிப்பில் குற்றநடவடிக்கைகளைக் கண்காணிக்க சிறப்புப் பிரிவு ஒன்று முதல்வர் அலுவலகத்தில் உருவாக்கப்படும்” என்றார்.

பெண் ஐபிஎஸ் அதிகாரியுடன் பாஜக எம்.எல்.ஏ. ராதா மோகன் தாஸ் மேற்கொண்ட தகராறு குறித்து கூறிய ஸ்ரீகாந்த் சர்மா, முதல்வர் யோகி அனைத்து எம்.எல்.ஏக்களும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் குறிப்பாக பெண் அதிகாரிகளுடன் முறைதவறக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளார் என்றார்

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...